பொன்னுலகை எதிர் நோக்கும் எண்ணம்,

புனிதர் உள்ளில் அரும்புகையில், 

இன்னுலகில் படும் துன்பம் ஒழியும்;

புரியத் தேடுவோம் வெளிப்பாடு. 

என்னிலையில் இனி நாமும் இருப்போம்,

என்பது அறிய விரும்புகையில், 

நன்னிலை நல்கும் இறைமகன் பார்ப்போம்;

நம்பிப் பாடுவோம் வெளிப்பாடு!

(யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு)