போலிப் பொய்கள் புகுந்த அந்நாளில்,
புழுங்கிய யூதா எழுதுகிறார்.
நீலிக் கண்ணீர் வடிப்போர் திருந்த,
நெறிகள் கூறிக் கழுவுகிறார்.
சோலிக்கென்று பலர் இந்நாளில்,
சொல்லிச் செய்யார், சுட்டுகிறார்.
காலில் விழுந்து கறைகள் அகற்றின்,
கடவுள் அருள் கொட்டுகிறார்!
(யூதா எழுதிய திருமுகம்)