இறப்பின் பின்னர் என்ன நடக்கும்?

இதையறிந்தவர் யார் இங்கே?

திறப்பின் வாசல் இயேசுவை நோக்கும்;

தெரியும் புது வாழ்வங்கே.

உறக்கம் போல இறப்பு வந்தாலும்,

இருக்கப்போவது இனி எங்கே?

மறக்காதிருப்போம், மாதிரி இயேசு

மன்னவரோடு நாம் அங்கே!

(மத்தேயு 25)

கொன்று போட்டால் கேட்பாரில்லை, 

கொல்வோம் என்பார் நடுங்கிட, 

அன்று தெய்வம்  அதிசயம் செய்தார்;

அவர் மகனை உயிர்ப்பித்தார். 

சென்று ஒளிந்த  அடியரைத் திருத்த,

செய்தியை மட்டும் சொல்லாது, 

தின்று, தெளியத் தொடவும் வைத்தார்;

தெய்வ மகன் மெய்ப்பித்தார்!

(மத்தேயு 28, மாற்கு 16, லூக்கா 24, யோவான் 20 & 21).

எடுத்து அடக்கம் செய்வதற்கென்று,

எழுந்தார் அரிமத்தி யோசேப்பு.

அடுத்து உள்ள அன்னார் தோட்டம், 

அமைந்திருந்ததும் சிறப்பு. 

கொடுத்து நறுமணம் பெற்றவர் அன்று,

குன்றிணை நிக்க தெம்மு. 

படுத்து விடுவார் என நினைத்தார்கள்;

பாருங்கள் இறையின் பம்மு!

(யோவான் 19:38-42)