விட்டிடு கொடுமை!

விட்டிடு கொடுமை!

ஊரைச் சுற்றிப் பார்க்கச் சென்றார்;

ஒளித்திருந்து வெறியர் கொன்றார்.

யாரைக் காக்க இவரைக் கொன்றார்?

இல்லை நற்பதில், தராது சென்றார்.

போரைத் தவிர்ப்பீர், பேசிட வாரீர். 

புரிதல்  பெற்று, இணையப் பாரீர்.

நீரை வடிக்கும்  குடும்பமும் பாரீர்.

நினைந்து, திருந்தி, வாழ, வாரீர்!

-கெர்சோம் செல்லையா. 

வந்தவர் எத்தனை பேரென அறியோம்;

வணங்கி, பொற்பொருள் தருகிறார்.

தந்தவர் அரண்மனை செல்லாவண்ணம்,

தடுக்கப்பட்டு, விடை பெறுகிறார்.

முந்தையர் கொடுத்த பரிசுகள் போன்று,

முழுமையாக நமைத் தருவோம்.

இந்தப் படைப்பின் விளைச்சல் பெருகும்;

இனிய புதுவழிப் பேறுறுவோம்!

(மத்தேயு 2)

May be an image of 2 people

பிறந்த செய்தி முதலில் கேட்டார்,

பிறரால் ஒடுக்கப் பட்டவரே.

திறந்த வெளியில் மந்தை காக்கும்,

தீட்டுத் தொழிலால் கெட்டவரே!

உறைந்த மடமை உள்ளில் கொண்டார்,

உண்மையின்றித் தீட்டென்பார்.

நிறைந்த அறிவால் நமை நடத்தும்,

நேரிறையோ நற் கூட்டென்பார்!

(லூக்கா 2: 8-12).

May be an image of lamb, sheep and text