தன்பணி முடிக்கும் நேரம் நெருங்க,
தாகம் மிகுந்த அவர் கேட்டார்.
அன்னிலை விருப்பு உடல் மெய்க்கெனினும்
ஆய்வோர் இன்று மெய் கண்டார்.
இன்னில மைந்தர் உயிர் நீர் அருந்த,
ஏங்கும் இயேசு நமைக் கேட்டார்.
நன்னீர் இல்லார் காடியே கொடுப்பார்;
நம்முட் கைப்பு பொய் கண்டார்!
(யோவான் 19:28-29).