கொன்று போட்டால் கேட்பாரில்லை,
கொல்வோம் என்பார் நடுங்கிட,
அன்று தெய்வம் அதிசயம் செய்தார்;
அவர் மகனை உயிர்ப்பித்தார்.
சென்று ஒளிந்த அடியரைத் திருத்த,
செய்தியை மட்டும் சொல்லாது,
தின்று, தெளிய, தொட்டிட வைத்தார்;
தெய்வ மகன் மெய்ப்பித்தார்!
(மத்தேயு 28, மாற்கு 16, லூக்கா 24, யோவான் 20 & 21).