பன்முறை காட்சிகள் பலருக்கு ஈந்து, 

பார்த்தவர் ஐயம் போக்கினார். 

நன்மறை வாக்கும் நயமாய்த் தந்து, 

நம்பும் அடியர் ஆக்கினார். 

என் முறை வந்த அந்நாள் இரவில், 

எளியன் இழிவும் நோக்கினார்.

வன்முறை விட்டேன், வழியும் கண்டேன்;

வாடா அன்பில் தூக்கினார்!

(மத்தேயு 28).