எல்லோர் எதிலும் மேலோர் யாரோ?

இயேசு என்று பதிலுரைத்தார்.

இல்லாப் பெயரின் நூலோர் யாரோ?

எபிரேயத்தில்  அது மறைத்தார்.

நல்லாவியரால்  நடப்போர் யாரோ? 

நம்பிப் பிடித்து ஓடுகிறார்.

செல்லார் மீளத் துடிப்போர் யாரோ?

செய்திக்கிடையே தேடுகிறார்!

(எபிரேயருக்கு எழுதிய திருமுகம்).