எந்நிலையாயினும், இழிவாய் விளித்தும்,

இறையில் இல்லை, பொய்மை.

அந்நிலை நோக்கித் தூய்மைப் படுத்தும்,

ஆன்மீகந்தான் மெய்மை.

செந்நிறக் குருதிச் சிலுவையில் பழித்தும், 

சிறிதும் இல்லை, பொய்மை.

இந்நிறைவான இயேசுவை எடுத்தும், 

ஏன் மறந்தோம் மெய்மை?

(தீத்துக்கு எழுதிய திருமுகம்)