போலிப் பொய்கள்  புகுந்த அந்நாளில், 

புழுங்கிய யூதா எழுதுகிறார். 

நீலிக் கண்ணீர் வடிப்போர் திருந்த, 

நெறிகள் கூறிக் கழுவுகிறார். 

சோலிக்கென்று பலர் இந்நாளில், 

சொல்லிச் செய்யார், சுட்டுகிறார்.

காலில் விழுந்து கறைகள் அகற்றின், 

கடவுள் அருள் கொட்டுகிறார்! 

(யூதா எழுதிய திருமுகம்)