எது வரலாறு?

வேங்கையும் மான்களும் எழுத மறுக்க, 

வேடர் வரைவதே வரலாறு. 

தூங்கிடும் மனிதர் எழும்பாதிருக்க, 

தொடர்ந்து உரைப்பர் அவதூறு. 

ஏங்கிடும் உள்ளம் எங்குதான் உண்டு, 

என்று இறங்குதே மறையாறு.

வாங்கிடும் அடியர் வழங்கும் தொண்டு, 

வரலாறென்று இனி கூறு!

-கெர்சோம் செல்லையா.