எது வரலாறு?

வேங்கையும் மான்களும் எழுத மறுக்க, 

வேடர் வரைவது வரலாறு. 

நீங்களும் நானும் மௌனமாய் இருக்க, 

நேர்மையை ஓட்டும் அவதூறு.

ஏங்கிடும் உள்ளம் எவ்விடம் உண்டு, 

என்று இறங்கும் மறை ஆறு.

வாங்கிடும் அடியர் வழங்கும் தொண்டு, 

வரலாறுரைக்க, நீ கூறு!

-கெர்சோம் செல்லையா.