இன்புறு வேளையில் இயல்பாய் வருவது,

யாவர் உள்ளிலும் மகிழ்ச்சி. 

துன்புறு நேரமும் தெய்வத்திலிருந்தால்,

தெரியும் உண்மை மகிழ்ச்சி.

அன்புடையார்க்கு அனைத்து பொழுதும், 

ஆண்டவர் தருவார் மகிழ்ச்சி. 

பின்பிது உணர்த்த, பவுலார் வரைந்தார்,

பிலிப்பிய கடிதம் மகிழ்ச்சி!

(பிலிப்பியர்).