பகரைன் NEC திருக்கோவிலில் பெற்ற,
இறை வாக்குறுதி:
ஏசாயா 59:21.
ஈர் இருபத்தொன்று ஆண்டுகள் முன்னே,
இறையகம் நோக்கி ஒருவன் வந்தான்.
ஓரமாய் தனது உடமையை வைத்து,
உள்ளில் திருமண ஆசி கேட்டான்.
தூரமாய் வருவதும் அறிந்த இறையோ,
தொடரும் பின்னடியார்க்குந் தந்தான்.
கோரிய விண்ணப்பம் ஒன்றே ஆயினும்,
கொடுக்கும்படி பல கோடி இட்டான்!
(இன்று 43-ஆம் ஆண்டின் மணநாள்!)