தோலை வெட்டும் சடங்கு செய்தாலே,
தெய்வ மீட்பு வருமென்று,
வேலை வெட்டி இல்லார் உரைத்தார்;
விழுந்த கலாத்தியர் பதைத்தார்.
வாலை நிமிர்த்தச் சடங்குகள் வேண்டாம்;
வாழும் பற்றே தருமென்று,
நூலை எழுதிப் பவுல் எச்சரித்தார்,
நெறிப் பிழையும் புதைத்தார்!
(கலாத்தியர்)