மண்ணிலும் விண்ணிலும் மாபெரும் ஆளுமை, 

மனிதனாய் வந்த இறைவனுக்கே. 

விண் தரும் மீட்பை விரைந்தெங்கும் உரைக்க, 

வேண்டும் பல்லின அரவணைப்பே.

எண்ணிப் பணிந்து கழுவினால் வாழ்வார்;

என்றும் இறைவன் இவரிடமே.

கண்ணிமை போன்று காப்பார் இயேசு;

காணும் கண்கள் எவரிடமே?

ஆமென்.

(மத்தேயு 28:18-20).