எத்தனை திரள் என்  தீவினை அறிவேன்;

எப்படி நான் இறை மீட்பு பெறுவேன்?

அத்தனை வழிகளும் முட்டிடும் சந்து;

அழுது, திரும்புது, என் மகிழ்வுந்து!

ஒத்தையொரு வழி பவுல் அறிவித்தார்;

இயேசு மீதுறும் பற்றென்றுரைத்தார்.

பித்தம் தெளிய நான் பற்றிக் கொண்டேன்.

பேரருளாலே, மீட்பும் கண்டேன்!

(உரோமர் 3)