நீண்ட நெடியக் கடிதங்கள் எழுதி,

நிறைவேற்றும் பவுல் ஊழியம்,

தாண்ட முடியாத் தடைகள் உடைக்க, 

தலைவன் அருளும் வாழ்வியம்.

ஆண்ட அரசர்கள் அனைவரும் போனார்;

அப்போத்தலனோ வாழ்கிறார்.

ஈண்டு இதனை ஏற்றின்று பணிவார்,

என்றும் இறையுள் ஆள்கிறார்!

(தீமோத்தேயு & தீத்து கடிதங்கள்)