அழித்துப் பெறுவதே ஆசி என்றால்,
அரசிற்கும் நாட்டிற்கும் தேவையில்லை.
விழிப்புணர்வுள்ள மக்கள் என்றால்,
விலைக்கு இயற்கை போவதில்லை!
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
அழித்துப் பெறுவதே ஆசி என்றால்,
அரசிற்கும் நாட்டிற்கும் தேவையில்லை.
விழிப்புணர்வுள்ள மக்கள் என்றால்,
விலைக்கு இயற்கை போவதில்லை!
-கெர்சோம் செல்லையா.
எது புதுமை?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:36-39.
36 அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதியவஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது.
37 ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்.
38 புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.
39 அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
ஒன்று இன்று வேறொன்றாகும்
உருமாற்றத்தைப் புதுமை என்பார்.
என்றுமெங்கும் இல்லா ஒன்றை
இறைவன் தந்தால் என்னென்பார்?
பன்றி புரளும் அழுக்காயிருந்தும்,
படைத்தவர் தூய்மை ஆக்குகிறார்.
இன்று இதுதான் புதுமை என்பேன்.
இழிஞரும் புனிதர் ஆகின்றார்.
ஆமென்.

உள்ளம் ஒடுக்கா நோன்பு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:33-35.
33 பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீஷர் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம்பண்ணிக்கொண்டு வருகிறார்கள், பரிசேயருடைய சீஷரும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.
34 அதற்கு அவர்: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா?
35 மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
உடலை ஒடுக்கிப் புசியாதிருந்தால்,
உங்கள் ஆன்மா அடங்கிடுமோ?
குடலை வருத்திப் பசியாயிருந்தால்,
குறை, குற்றங்கள் முடங்கிடுமோ?
கடவுள் அன்பைப் பகிரவென்றால்,
கடுமை நோன்பும் முறையாகும்.
விடுதலைதரும் நம் இயேசு இருக்க,
விலைக்குக் கேட்டால், குறையாகும்!
ஆமென்.

சொந்த உறவாய்ச் சேர்ப்போம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:29-32.
29 அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள்.
30 வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
31 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
32 நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
எந்தன் நேர்மை உயர்வென எண்ணி,
எளியரைப் பார்க்க வெறுத்திட்டேன்.
உந்தன் தூய்மை முன்னர் நிற்க,
ஒருவரும் இல்லை மறந்திட்டேன்.
மைந்தன் வந்து உரைத்ததினாலே,
மனிதத் தன்மை புரிந்திட்டேன்.
சொந்த உறவாய்ச் சேர்த்துக்கொண்டு,
செயலில் உம்மை அறிவிப்பேன்!
ஆமென்.

|
|||||
|
|||||
யாருக்குப் புகழ்ச்சி?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:24-26.
24 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25 உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான்.
26 அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
தம்மை அனுப்பிய தந்தை மகிழத்
தரணியில் இயேசு வாழ்ந்தாரே.
நம்மை அனுப்பும் மைந்தன் மகிழ,
நன்மை செய்து வாழ்ந்தோமா?
உம்மை ஒருவர் இப்படிக் கேட்பின்,
உமது வாழ்க்கை என் சொல்லும்?
செம்மை இல்லை என்பதனாலே,
சீர்பட இயேசு முன் நில்லும்!
ஆமென்.

மன்னிப்பு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா: 5:20-23.
20 அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
21 அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள்.
22 இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்கள் இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறதென்ன?
23 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?
கிறித்துவில் வாழ்வு:
உடற் பிணி வந்தால், மருத்துவர் உண்டு.
உளப் பிணியாளர்க்கும் மருத்துவம் உண்டு
திடப்படுத்தலுக்கும் பலபேர் உண்டு.
தீவினை தீர்க்க வழி எங்குண்டு?
கடல் போல் தெரியும் வாழ்க்கை உண்டு.
கவிழ்ந்த படகில் விழுந்தவர் உண்டு.
அடம் பிடிக்காமல் வருபவர் உண்டு.
அவரை மீட்க மன்னிப்புண்டு!
ஆமென்.

மற்றவர் பற்று!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:18-19.
18 அப்பொழுது சில மனுஷர் திமிர்வாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடே எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவர் முன்பாக வைக்கவும் வகைதேடினார்கள்.
19 ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
உந்தன் பற்று உம்மை மீட்கும்;
உரைத்தார் இயேசு பலமுறை அன்று.
சொந்தப் பற்று தொய்யும்போது,
சொந்தம் வந்து தூக்குதல் உண்டு.
இந்தப் புலவன் மீட்பிற்கென்று,
இவனது பெற்றோர் ஏங்கியதுண்டு.
அந்தப் பற்றை ஏற்றுக்கொண்ட,
ஆண்டவரால்தான் வாழ்வு இன்று!
ஆமென்.


|
04:23 (0 minutes ago) |
![]() ![]() |
||
|
|
||||
இறைவேண்டல் ஏறெடுப்போம்!
|
|
|||||
|
|||||
|
|||||