கொடுப்போம்,கொடுப்பார்!

கொடுப்போம்,கொடுப்பார்!
கிறித்துவின் வாக்கு :லூக்கா 6:38.
 
38 கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
 
கிறித்துவில் வாழ்வு:
எடுக்கும் எண்ணம், என்னில் பெருக்கம்.
இதனால்தானே அலைகின்றேன்.
கொடுக்கும் பண்பும் அளவில் சுருக்கம்;
கொடாததினால் தொலைகின்றேன்.
தடுக்கும் நெஞ்சை எடுத்து மாற்றும்;
தாழ்வின் நிலையை நினைக்கின்றேன்.
ஒடுக்கப்பட்டோர் வாழ்வை ஏற்றும்;
உதவ எனையும் பிணைக்கின்றேன்.
ஆமென்.

என் முகம் முதுகு தெரியவில்லை!

என் முகம் முதுகு தெரியவில்லை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:37.

37 மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.

கிறித்துவில் வாழ்வு:
இரண்டு கண்கள் என்முன்னிருந்தும்,
என்முகம், முதுகு தெரியவில்லை.
உருண்டு திரண்டு அவைகள் உழன்றும்,
உடன் நிற்பவரைப் புரிவதில்லை.
முரண்டு பிடிக்கும் எனக்கு வேண்டும்,
முழுமை காட்டும் கண்ணாடி.
பிறண்டி, பிறரைப் பழிக்காத்திருக்க,
பிடிப்பேன் திருமறை முன்னாடி!
ஆமென்.

Image may contain: 1 person

இரக்கம் என்பது இறைவனின் பண்பு!

இரக்கம் என்பது இறைவனின் பண்பு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:35-36.
35 உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.
36 ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.

கிறித்துவில் வாழ்வு:
இரக்கம் என்பது, இறைவனின் பண்பு;
இயேசுவில் கண்டேன், இந்த அன்பு.
அரக்கர் என்று, அகற்றுதல் தப்பு;
அனைவரும் இறையின் சாயல் படைப்பு.
சிறக்கும் இந்த தன்மை கொண்டு,
செயல்படுவோர்க்கு வாழ்வு உண்டு.
உருக்கம் பெருக, ஊழியம் பண்ணு;
உள்ளில் அன்பு, இலையேல் மண்ணு.
ஆமென்.

Image may contain: 1 person, sitting, outdoor and water
LikeShow More Reactions

யாவருக்கும் கொடுத்தலே அன்பு!

யாவருக்கும் கொடுத்தலே அன்பு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:32-34.

32 உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே.
33 உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.
34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே.

கிறித்துவில் வாழ்வு:
நன்மை செய்வார் என்று பார்த்து,
நாமும் சிலர்க்குக் கொடுக்கிறோம்.
வன்மம் கொண்டார் வரிசை சேர்த்து,
வாழ்வில் பலரை விடுக்கிறோம்.
என்னே இறையின் விருப்பறிந்து,
இங்கு நன்மை செய்பவர் யார்?
இன்னாராகப் பிரித்தது போதும்;
யாவருக்கும் உதவப் பார்!
ஆமென்.

Image may contain: text

தங்கமகனின் தங்கச் சட்டம்!

தங்கமகனின் தங்கச் சட்டம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:31.

31 மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

கிறித்துவில் வாழ்வு:
எதை எதிர்பார்த்தோம் பிறரிடம்?
அதை அளித்தோமா அவரிடம்?
இதை எண்ணாது இவ்விடம்,
உதை படுகிறதே மானிடம்!
விதை நன்றோவென எண்ணுவாய்;
பதை பதைக்காமலே அறுப்பாய்.
கதை போல் வாழ்வு களிப்பாய்,
சிதை எரித்தாலும் வாழுவாய்!
ஆமென்.

Image may contain: text that says "Golden Rule do unto .thors asyou Would have them do unto you."

வாங்கினால் கொடாதோர்!

வாங்கினால் கொடாதோர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:30.

30 உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே.

கிறித்துவில் வாழ்வு:
வாங்கினால் கொடாத வஞ்சகரே
வர்த்தகர் வடிவில் வருகின்றார்.
தூங்கினார் இறைவன் எனக்கூறி,
துன்பம் மட்டுமே தருகின்றார்.
ஏங்குவார் ஏழையர் என எண்ணி,
எடுத்துக் கொடுப்பதே நம் கடமை;
தாங்குவார் இறைவன் நம்மையுமே;
தரணியில் யாவும் அவருடமை!
ஆமென்.

Image may contain: 5 people, people smiling, text

மறு கன்னம்!

மறு கன்னம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:29.
29 உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.
கிறித்துவில் வாழ்வு:
அறைந்தவருக்கு உடலை விடுத்தீர்;
அம்மண நிலையில் உடையும் கொடுத்தீர்.
இறைமகனாயினும் பொறுமை காத்தீர்
எங்களை மீட்க வெறுமையும் பார்த்தீர்.
உறையின் கத்தி எடுக்காதென்றீர்;
உண்மைக்குயிரைக் கொடுத்து வென்றீர்.
மறைவழி  கன்னம் காட்டச் சொன்னீர்;
மறுக்குமிடத்தில் கொட்டுது சென்னீர்!
ஆமென்.

பழிக்குப் பதில் இறைவேண்டல்!

பழிக்குப் பதில் இறைவேண்டல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:28
28 உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.
 
கிறித்துவில் வாழ்வு:
நன்மை என்னும் விதை விதைத்து,
நானும் பலநாள் வேண்டிட்டேன்.
என்ன ஏது எதுவென்றறியேன்;
ஏமாற்றமே கொண்டிட்டேன்.
தன்மையற்றோர் பழி விதைக்க,
தாவும் மரங்கள் கண்டிட்டேன்.
இன்று இதுதான் இயல்பு என்று,
இவர்களுக்காக வேண்டுகிறேன்!
ஆமென்.

பகை ஒழிக்கும் நன்மை!

பகை ஒழிக்கும் நன்மை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:27.
27 எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.

கிறித்துவில் வாழ்வு:
பகைவரை வெளியே ஒழிப்பதென்றால்,
பலுகிப் பெருகி அவர் வருவார்.
வகையாய் உள்ளில் பகை ஒழித்தால்,
வாழ்வில் அமைதி இறை தருவார்.
புகைபோல் வாழ்க்கை போகுமென்றால்,
புவியில் நிலைக்க என் செய்வார்?
தொகையாய் நன்மை பகைவருக்கும்,
தொடர்ந்து செய்து அவர் உய்வார்!
ஆமென்.

Image may contain: cat
LikeShow More Reactions

வறியரை நினைப்பீர்!

வறியரை நினைப்பீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:24-26.
24 ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது.
25 திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ; பசியாயிருப்பீர்கள். இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ; இனி துக்கப்பட்டு அழுவீர்கள்.
26 எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
நான்கு செல்வர் வளர்ச்சியிலே,
நாடே வளரும் என்போரே,
ஏங்குமெளியர் வாழ்க்கையிலே,
எவைகள் தேவை அறிவீரா?
தூங்குகின்றார் என நினைத்துத்
தூசாய் அவரைப் புறக்கணிப்பின்,
தாங்குமிறையின் திருவாக்கு,
தட்டிக் கேட்கும், தெரிவீரே!
ஆமென்.

No automatic alt text available.