ஐயம் கொள்ளும் அடியவரே!

ஐயம் கொள்ளும் அடியவரே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:17-19.
17 இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று.
18 இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து,
19 நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.

கிறித்துவில் வாழ்வு:
ஆவியில் பிறந்த அடியவரும்,
அவ்வப்போதுப் பதறுகிறார்.
பாவியர் துன்பம் கொடுப்பதனால்,
பார்வை விலகித் தவறுகிறார்.
சாவினை நினைத்துச் சாகாமல்,
சரியாய் அவர் பணி செய்திடுவார்,
மேவிய மீட்பைப் பெறுவதுடன்,
மேலும் விண்முடி எய்திடுவார்!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

யாருக்குப் பெருமை சேர்க்கின்றோம்?

யாருக்குப் பெருமை சேர்க்கின்றோம்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:16-17.
16 எல்லாரும் பயமடைந்து: மகாதீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று.

கிறித்துவில் வாழ்வு:
ஊர் புகழும் புகழ்ச்சி எல்லாம்,
உண்மையாக இருக்குமோ?
பேர் பெருமை என்பது எல்லாம்,
பெரிதாய் நன்மை பெருக்குமோ?
நேர்மையென்று இருந்தால் மட்டும்,
நிலைக்கும் அந்த புகழ்ச்சியே.
பார் படைத்த இறை வழியில்,
பாராப் பெருமை இகழ்ச்சியே!
ஆமென்.

Image may contain: text
LikeShow More Reactions

Comment

இளைஞனே எழுந்திரு!

இளைஞனே எழுந்திரு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:11-15.
11 மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.
12 அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.
13 கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,
14 கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
15 மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.

கிறித்துவில் வாழ்வு:
எண்ணில் அடங்கா இளவயதோர்,
இன்றும் இறந்து கிடக்கின்றார்.
பண்ணும் செயலின் விளைவறியார்,
பாவம் விரும்பி நடக்கின்றார்.
மண்ணே வாழ்வு என மயங்கும்,
மக்கள் தெளியத் தொட்டருளும்.
விண்ணே இரங்கும், விளிக்கின்றேன்.
விரைந்து இவரை மீட்டருளும்!
ஆமென்.

Image may contain: 1 person, outdoor and text
LikeShow More Reactions

Comment

இப்படிப்பட்ட பற்றுறுதி!

இப்படிப்பட்ட பற்றுறுதி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:9-10.
9 இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10 அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க்கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
பற்று கொண்டோம் என்றுகூறி,
பலபேர் முன்பு உயர்த்தும் நாம்,
சற்று நேரம் நமது பற்றைச்
சரிதானோவென ஆய்வோம்.
வெற்று வேட்டாய் வெடியாதிருக்க,
வேண்டும் பற்றில் தாழ்மை.
கற்று நாமும் தாழாவிட்டால்,
காண்போம் வாழ்வில் ஏழ்மை!
ஆமென்.

Image may contain: text

ஒரு வாக்கு போதும்!

ஒரு வாக்கு போதும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:6-8.
6 அப்பொழுது இயேசு அவர்களுடனேகூடப்போனார். வீட்டுக்குச் சமீபமானபோது, நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரிடத்தில் போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல;
7 நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
8 நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான்; என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.

கிறித்துவில் வாழ்வு:
எருவாக்கி எம்மை இழிநிலை தள்ளும்,
ஏற்றத் தாழ்வின் உலகத்திலே,
திருவாக்குரைத்துத் தீமைகள் அகற்றும்;
தெய்வமே, உம்மை அண்டிவந்தோம்.
உருவாக்கின நாள் உரைத்ததுபோன்று,
உமது வல்லமை வெளிப்படவே,
ஒரு வாக்குரைப்பில் நோய்கள் அகலும்;
உம்மிடம் மட்டும் மண்டியிட்டோம்!
ஆமென்.

Image may contain: text
LikeShow More Reactions

மாற்று சமய மக்கள்!

மாற்று சமய மக்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:
1 அவர் தம்முடைய வார்த்தைகளையெல்லாம் ஜனங்களுடைய காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.
2 அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான்.
3 அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான்.
4 அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான்.
5 அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெபஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
மாற்று சமய மக்களும்கூட
மதித்து இயேசுவை நோக்குகிறார்.
ஏற்று அறியும் நெஞ்சற்றோரே,
இழிவாய் ஏசித் தாக்குகிறார்.
தூற்றுகின்றார் என்று வருந்தித்
தொடர்பை முறித்துச் செல்லாதீர்.
காற்று வீசும், கனிவார் அவரும்.
கனவு என்று சொல்லாதீர்!
ஆமென்.

Image may contain: 4 people, including Julius Karunakaran, outdoor
LikeShow More Reactions

Comment

பாறையுள் தோண்டிக் கட்டியவர்!

பாறையுள் தோண்டிக் கட்டியவர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:46-49.
46 என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?
47 என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குச் காண்பிப்பேன்.
48 ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக் கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
49 என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
நல்லார் பொல்லார் எனப்பார்த்து,
நாட்டில் வருமோ புயல்காற்று?
எல்லாரையும் அது தாக்கும்;
எனினும், நம்மை இறை காக்கும்.
பொல்லார் மணல்மேல் ஆள்கின்றார்;
புயலில் விழுந்து, மாள்கின்றார்.
இல்லார் இறைகீழ் தாழ்கின்றார்;
இதனால் நிலைத்து வாழ்கின்றார்.
ஆமென்.

எப்படித் தெரியும்?

எப்படித் தெரியும்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:43-45.
43 நல்ல மரமானது கெட்ட கனிகொடாது, கெட்ட மரமானது நல்ல கனிகொடாது.
44 அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச் செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை.
45 நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.
 
கிறித்துவில் வாழ்வு:
மண்ணின் செழுமை மரங்களில் தெரியும்.
மரத்தின் தன்மை கனிகளில் தெரியும்.
கண்ணாம் விளக்கில் காட்சிகள் தெரியும்.
காட்சியை ஆய்ந்தால் கருத்தும் புரியும்.
உண்மை, பொய்மை எப்படித் தெரியும்?
உரைக்கும் வாக்கின் செயலில் தெரியும்!
விண்ணின் விருப்பு யாருக்குத் தெரியும்?
விரும்பிப் பணிவோம், நமக்கும் புரியும்!
ஆமென்.

உத்திரம் மறந்து துரும்பைத் திட்டும்

உத்திரம் மறந்து துரும்பைத் திட்டும்,
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:41-42.

41 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
42 அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.

கிறித்துவில் வாழ்வு:
உத்திரம் ஒன்றைக் கண்ணில் வைத்து,
ஒருசிறு துரும்பைத் திட்டுகிறேன்.
பித்தளையாகப் பல்லை இளித்து,
பொன்மேல் சினத்தைக் கொட்டுகிறேன்.
நித்தமும் தவற்றால் நெஞ்சை நிரப்பி,
நிம்மதி இழந்து முட்டுகிறேன்.
பித்தனாய் நானும் மாறாதிருக்க
பேரருட் கதவைத் தட்டுகிறேன்!
ஆமென்.

Image may contain: text
LikeShow More Reactions

Comment

செல்லேன்! செல்வேன்!

செல்லேன்! செல்வேன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:39-40.
39 பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?
40 சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.

கிறித்துவில் வாழ்வு:
குழி எது, குன்றெது அறியாதவரும்,
கொடுமை, நன்மை புரியாதவரும்,
வழி இது, வாழ்வது தெரியாதவரும்,
வழி காட்டுகிறார், செல்லேனே!
பழி இது, மீள்வது என நன்கறிந்து,
பண்பின் செயலை மட்டும் புரிந்து,
மொழிவது மெய்யோ எனத்தெரிந்து,
மொழிந்தால் அவருடன் செல்வேனே!
ஆமென்.