நல்லிறை நம்முடன் இருக்கும் எண்ணம்
நாளும் வளர்ந்து ஒட்டவே,
செல்லுமிடங்களில் வைக்கும் வண்ணம்
இல்லம் கட்டி நிலைத்திடச் செய்யும்,
இனிய நாட்களும் கிட்டவே
அல்லாததால், அருளினைப் பெய்யும்,
அம்முறை கூட சரிப் பட்டதே!
(விடுதலைப் பயணம் 24 & 25).

The Truth Will Make You Free
பாலை நிலம் வழி செல்லும் நாளில்,
பருகிடத் தண்ணீர் கிடைக்காமல்,
காலை தொட்டு மாலை வரையில்,
கடுஞ்சினத்துடன் தேடினார்.
கோலை எடுத்து மோசே அடிக்க,
கொடுக்கும் பாறை கிறித்துவால்,
நாளை உயிர் நீர் நாமும் பெறுவோம்;
நம்பாதவர்தான் வாடினார்!
(விடுதலைப் பயணம் 17:1-7).