பத்து நாட்களில் முடிக்கும் பயணம்
பற்பல ஆண்டுகள் ஆவதற்கு,
கத்திடும் கூட்டம் கலகம் செய்தது
சொத்து என்றவர் செல்கிற நாடும்
சொந்த இறையின் அருளென்று,
புத்தியில் ஏற்க மறுத்தவர் கண்டு,
புலம்பும் நெஞ்சு எரிகிறது!
(எண்ணிக்கை 13 &14)

The Truth Will Make You Free
பாலை நிலம் வழி செல்லும் நாளில்,
பருகிடத் தண்ணீர் கிடைக்காமல்,
காலை தொட்டு மாலை வரையில்,
கடுஞ்சினத்துடன் தேடினார்.
கோலை எடுத்து மோசே அடிக்க,
கொடுக்கும் பாறை கிறித்துவால்,
நாளை உயிர் நீர் நாமும் பெறுவோம்;
நம்பாதவர்தான் வாடினார்!
(விடுதலைப் பயணம் 17:1-7).