கிறித்துவை யாரென அறிய விரும்பின்,
கொலோசை கடிதம் வாசிப்போம்.
திருத்திடும் தெய்வம் யாரெனக் கண்டு,
தீமை அகற்றிட யோசிப்போம்.
நரித்தன வாழ்க்கை நமக்கினி வேண்டாம்.
நேர்மையாயிருக்க யாசிப்போம்.
ஒருத்தொருக்கொருவர் உதவியாயிருந்து,
உண்மை இறையை நேசிப்போம்!
(கொலோசையர்)