தன்பணி முடிக்கும் நேரம் நெருங்க,

தாகம் மிகுந்த அவர் கேட்டார்.

அன்னிலை  விருப்பு  உடல் மெய்க்கெனினும்

ஆய்வோர் இன்று மெய் கண்டார்.

இன்னில மைந்தர் உயிர் நீர் அருந்த, 

ஏங்கும் இயேசு நமைக் கேட்டார்.

நன்னீர் இல்லார் காடியே கொடுப்பார்;

நம்முட் கைப்பு பொய் கண்டார்! 

(யோவான் 19:28-29).