வெறுத்தலை விதைத்து, வெறுத்தலை வளர்த்து,

வெறுப்பின் விளைச்சல் அறியார் முன்,

பொறுத்தலே இறைவழி, பொறுப்பீர் என்று, 

புனிதர் சிலுவையில் வேண்டுகிறார். 

அறுத்தலை விரும்பி, அறுத்தலில் விழுந்து, 

அழுகிற  மாந்தர் திரும்பிப் பின், 

நிறுத்திட,  நாமும் பொறுத்தலை இன்று, 

நினைந்து வாழவும்,  தூண்டுகிறார்!

(லூக்கா 23:34).