கொல்கதா என்னும் கொலைக்கள மலைக்கு,
குருசு சுமந்தவர் நடக்கிறார்.
செல்கிற வழியில் சீர் மனப் பெண்கள்,
சிறிது வெறியம் கொடுக்கிறார்.
நல்நினைவோடு தன் கடன் முடிக்க,
நடக்கும் ஏசுவோ தடுக்கிறார்.
வெல்கிற எண்ணம் கொள்கிற தலைக்கு,
வெறியம் எதற்கு? உடைக்கிறார்!
(மாற்கு 15).