முரண்டு பிடிக்கும் தன்மை இல்லாமல்,
முதலில் இயேசு தனை விட்டார்.
இரண்டு கள்வர் இடம் வலம் தொங்க,
இழிவில் அறையவே விட்டார்.
திரண்டு வந்த வழிப் போக்கினரால்,
தீயன் என்றும் பழிக்கப் பட்டார்.
அரண்டு மறைந்த அடியார் எங்கே?
அவராலுமே கை விடப் பட்டார்!
(மாற்கு 15).