கழுகின் பார்வை!
கழுகின் பார்வை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:34-37.
34 அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.
35 திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
36 வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
37 அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
மலைமேல் வாழும் கழுகின் கண்கள்,
மண்ணில் உணவைக் காண்பதுபோல்,
தொலைநோக்கோடு நாமும் பார்த்தால்,
தூயவர் அரசைக் கண்டிடுவோம்.
அலைபோல் இழுக்கும் அவரது வருகை,
அறியா நேரம் என்பதனால்,
இலைமேல் நீராய் இனியிருக்காமல்,
இயேசைப் பற்றிக் கொண்டிடுவோம்!
ஆமென்.
தன்னலம் நன்னலமா?
தன்னலம் நன்னலமா?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:33.
33 தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்து போவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக் கொள்ளுவான்.
கிறித்துவில் வாழ்வு:
தன்னலம் இன்று தலைமேல் உயர்ந்து,
தலைவராய் உலாவும் நாட்டிலே,
அந்நலம் சிறந்த பொன்னலம் என்று,
அளக்கிறார் மூடர் வீட்டிலே.
இந்நிலை தொடர்ந்தால் இருளே பரவும்;
இதனை உணர்வோம் கூட்டிலே.
நன்னலம் என்பது பிறர் நலமாகும்;
நவில்வோம் வாழ்க்கைப் பாட்டிலே!
ஆமென்.
புலம் பெயர்ந்தோர்!
வாழவந்த ஏழையரை, வதக்குவதும் தவறு.
வாழ்விழந்து போவோரை மடக்குவதும் தவறு.
தாழவுள்ளோர் எனக்கருதித் தண்டிப்பதும் தவறு.
தலைகுனிய வைத்தாரே, தவற்றின்மேல் தவறு!
-கெர்சோம் செல்லையா.
வீட்டிலும் போதிப்பீர்!
வீட்டாருக்கும் சொல்வோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:30-32.
30 மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
31 அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.
32 லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.
கிறித்துவில் வாழ்வு:
கொடுப்பவர் வெறுத்து, கொடுப்பதை விரும்பும்,
கொடிய உலகமடா. கோணல் பாதையடா.
எடுப்பவர் அறியார், எடுப்பதும் தெரியார்,
இல்லை நேர்மையடா, இவரும் பேதையடா.
அடுப்பவர் நினைத்து, அவரை அணைத்து,
அவருக்குதவிடுடா, அதுதான் நீதியடா.
விடுப்பவர் வீழ்வார், வெந்தும் போவார்;
விடுதலை இல்லையடா, வீட்டில் போதியடா!
ஆமென்.
தவறு!
வாழவந்த ஏழையரை, வதக்குவதும் தவறு.
வாழ்விழந்து போவோரை மடக்குவதும் தவறு.
தாழவுள்ளோர் எனக்கருதித் தண்டிப்பதும் தவறு.
தலைகுனிய வைத்தாரே, தவற்றின்மேல் தவறு!
-கெர்சோம் செல்லையா.
எண்ணடி இறைவாக்கு!
எண்ணடித் தமிழ்ச் சொல்லில்
யான் திருந்த எழுதுகின்றேன்.
பண்ணடா பாட்டு என்றார்;
பழந்தமிழைத் தழுவுகின்றேன்.
மண்ணடி அழைக்கு முன்னர்
மறைவாக்கால் கழுவுகின்றேன்.
விண்ணரசர் ஆளுகின்றார்;
விடுதலையில் தொழுகின்றேன்!
-கெர்சோம் செல்லையா.
வேறுபிரிக்கத் தெரியாதார்!
வேறு பிரிக்கத் தெரியாதார்!
வெங்காயமா, வெள்ளைப் பூண்டா?
வேறு பிரிக்கத் தெரியாதார்,
இங்கே வந்து எதையோ சமைத்து,
இதையமுதாய் உண்ணு என்றார்.
பொங்காதவரா, பொன் சேர்ப்பவரா?
பொருளியல் அறிவு இல்லாதார்,
எங்களையாளும் நிலையிலுயர்ந்து,
இடியமீனாய் எண்ணுகின்றார்!
-கெர்சோம் செல்லையா.
உலோத்துவின் நாள் போன்று!
உலோத்துவின் நாளைப் போல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:28-29.
28 லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
29 லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.
கிறித்துவில் வாழ்வு:
உலோத்துவின் நாளில் நடந்ததுபோலே,
இன்றைய நாளிலும் இலாத்துகிறார்.
ஆத்திரக்காரராய் அடையத் துடித்தே,
அடங்கா உணர்ச்சியை ஏத்துகிறார்.
பூத்திடும் பிஞ்சு நிலையில் பழுத்தே,
புவியில் பலபேர் பீத்துகிறார்.
காத்திருக்காது அழிவோர் பார்த்தே,
கடவுளில் வருவீர், தேத்துகிறார்!
ஆமென்.
எலிப்பொறி!
பொறிக்குள் விழுந்த எலிகள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:26-27.
26 நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.
27 நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.
கிறித்துவில் வாழ்வு:
நெறிக்குள் வாழ வெறுத்திடுவார்;
நேர்மைப் பேச்சும் மறுத்திடுவார்.
வெறிக்கும் கள்ளை விரும்பிடுவார்;
விடிந்த பின்னும் அருந்திடுவார்.
பொறிக்குள் விழுகிற எலியாவார்
போகும் வழியிலும் பலியாவார்.
பறிக்கப்படுகிற வாழ்வுணர்வார்.
பாவி ஆயினும் மீள்வுணர்வார்!
ஆமென்.