இரக்கம் உருக்கம் இல்லாதாரே,
இங்கே தலைவர் ஆகின்றார்.
அரக்கர் அரக்கி என்கின்றாரே;
அவரால் எளியர் சாகின்றார்.
உறக்கம் ஓய்வு உண்ணாதாரே,
உழவர் வடிவில் நோகின்றார்.
மறக்கும் மக்கள் மதி கெட்டாரே;
மடையர் அழியப் போகின்றார்!
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
இரக்கம் உருக்கம் இல்லாதாரே,
இங்கே தலைவர் ஆகின்றார்.
அரக்கர் அரக்கி என்கின்றாரே;
அவரால் எளியர் சாகின்றார்.
உறக்கம் ஓய்வு உண்ணாதாரே,
உழவர் வடிவில் நோகின்றார்.
மறக்கும் மக்கள் மதி கெட்டாரே;
மடையர் அழியப் போகின்றார்!
-கெர்சோம் செல்லையா.
பார்ப்பவரே!
நற்செய்தி: யோவான் 4:45.
நல்வழி:
பார்ப்பவர் பார்ப்பதைச் சொல்லுங்கள்.
பலபேர் பார்க்க இது உதவும்.
சேர்ப்பவர் பகிர்ந்திடச் செல்லுங்கள்.
சிலபேர்க்கேனும் அது உதவும்.
தோற்பவர் மீளவும் நில்லுங்கள்.
தோல்வி ஆளவே தீதுதவும்.
ஏற்பவர் யாவரும் வெல்லுங்கள்.
இறையின் அன்புத் தூதுதவும்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
யோவான்4: 43-44
ஊர் ஒதுக்கும், உறவொதுக்கும்,
உடன் பிறப்பும் நமை ஒதுக்கும்;
பேர் சிறந்தோர் என்றழைக்கும்,
பெருமை வருமுன் ஒதுக்கும்.
யார் ஒதுக்கிக் கை விடினும்,
இறையுண்டு, அவர் ஒதுக்கார்.
நேர் கோடே எளிதிணைக்கும்;
நினைத்து வழி இனி புதுக்கும்!
அடியரா? ஆண்டவரா?
நற்செய்தி: யோவான் 4:41-42. 41.
அப்பொழுது அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து,42. அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
நல்வழி:
வாக்குரைக்கும் அடியருக்கு,
வழங்குகின்ற மதிப்பை,
ஆக்குகின்ற இறைவனுக்கு,
அளிப்பாயா மனிதா?
தூக்கியுன்னை உயர்த்துகின்ற,
தூயவரின் கரத்தை,
போக்குரைத்து உதறுவது,
போதாதோ? இனி வா!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
மனிதம் பிரிக்கும் மடையோரே!
நற்செய்தி: யோவான் 4:39-40.
39. நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
40. சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டுநாள் அங்கே தங்கினார்.
நல்வழி:
இரு பத்து நூறு ஆண்டுகள் முன்பு,
யூதரில் இருந்த இனவெறியின்,
மறு பதிப்பென்று சாதியை வைத்து,
மனிதம் பிரிக்கும் மடையோரே,
ஒரு குலமாக இணைவீர் என்று,
இயேசு தருகிற இறையன்பின்,
திருவடி கண்டு, திருந்துவோர்தான்,
தெய்வப் பண்பு உடையோரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
நட்டவன் ஒருவன்!
நற்செய்தி : யோவான் 4:36-38.
நல்வாழ்வு:
நட்டவன் ஒருவன் நனைத்தவன் ஒருவன்.
நற்பயன் தருவதோ நம்மிறைவன்.
இட்டவன் ஒருவன் எடுத்தவன் ஒருவன்,
எனினும் தருவான் நல்லிறைவன்.
விட்டவன் ஒருவன், விரும்பின் பெறுவன்,
விடுதலை ஈவதோ நம்மிறைவன்.
கெட்டவன் திருந்தின், கேட்பது பெறுவன்;
கிறித்து அன்பே நல்லிறைவன்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
அறுவடை மிகுதி!
நற்செய்தி: யோவான் 4:35.
35. அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நல்வழி:
நான்கு திங்கள் அறுக்காது,
நல்விளைச்சல் விடுவாரோ?
தூங்குபவரை ஒறுக்காது,
தொழிலிழந்து கெடுவாரோ?
தேங்கு மந்தம் பொறுக்காது,
திருமறையை எடுப்போமே.
ஏங்குகின்றார் இறைமகனார்;
இன்தொண்டிற்கு நடப்போமே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
குழப்பம் என்றால் சட்டமா?
குழம்புவது எமக்கு இட்டமா?
விளக்குவீர் இக்கட்டமே!
வேண்டும் நலத் திட்டமே!
இறைவிருப்பென்னும் உணவு!
நற்செய்தி: யோவான் 4:31-34.
நல்வழி:
உண்ணும் உணவு எவ்வாறுண்டு?
ஒவ்வோர் ஊரில் வெவ்வேறுண்டு.
எண்ணும் அறிவு எதுபோலுண்டு?
எளியோர் உணவு, அதுபோலுண்டு.
விண்ணின் முடிவு எங்கனமுண்டு?
விருந்து சுவையின் மங்கலமுண்டு!
தின்னும் மக்கள் எங்கேயுண்டு?
தெய்வ அரசில் இங்கேயுண்டு!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
அறிவித்தல்!
நற்செய்தி: யோவான் 4:28-30.
நல்வழி:
அறிந்து கொண்ட அப்பெண்ணும்,
அறிவிப்பதற்கு ஓடுகிறாள்.
தெரிந்து மறந்த அவளூரும்,
தெய்வம் காண நாடுகிறாள்.
பரிந்து பேசும் இறைமகனும்,
பழிப்போர் மீளத் தேடுகிறார்.
புரிந்து நாமும் அறிவிப்போம்;
புனிதர் அன்பில் பாடுகிறார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.