நாலடி நற்செய்தி!
என் ஆசிரியர்!
என்னக ஒளியில், இறையருளோடு,
பன்னிலையாளர் தூண்டலுண்டு.
முன்னிலை நிற்கும் என்னாசிரியர்,
நன்கு வாழ்வர், வேண்டலுண்டு!
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
நாலடி நற்செய்தி!
என் ஆசிரியர்!
என்னக ஒளியில், இறையருளோடு,
பன்னிலையாளர் தூண்டலுண்டு.
முன்னிலை நிற்கும் என்னாசிரியர்,
நன்கு வாழ்வர், வேண்டலுண்டு!
-கெர்சோம் செல்லையா.
மெய்யும், பொய்யும்!
நல்வழி:
மெய்யின் உருவே, இயேசு.
மேன்மை கண்டு, பேசு.
தெய்வ மகனே, இயேசு.
தெரிந்து, மெய்யைப் பேசு.
பொய்யின் வடிவே, பிசாசு.
புரிந்து, உண்மை பேசு.
செய்யும் தீங்கும், பிசாசு.
செயலில் நன்மை, பேசு!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
ஏன் கேட்கவில்லை?
நற்செய்தி:யோவான் 8:43. 43. என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?
நல்வழி:
கல்லைக் கனியச் செய்யும் ஊற்று,
கடவுள் வாக்கு என்றாலும்,
சொல்லைக் கேட்க விருப்பம் அற்று,
சொல்லும் மகனை மறுக்கிறார்.
நெல்லுக்குயிராம் நீர்நிலை ஏற்று,
நிலங்கள் விளைந்து நின்றாலும்,
புல்லுக்கொத்தோர் பொய்மை பெற்று,
புறம் காட்டி வெறுக்கிறார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
சாதிகள் நன்றோ?
முதலில் வந்த மனிதன் யாரோ?
முன்னோர் கூறும் ஆதம் பேரோ?
அதனை ஏற்பின், அவனினம் ஒன்றோ?
அப்படியாயின், சாதிகள் நன்றோ?
எதனை வாங்கக் கோவில் சென்றாய்?
ஏன்தான் இந்தத் தீமை கொண்டாய்?
கதறி அழுகிறார்; ஏழைக்கிரங்கு.
காணும் சாதிகள், சொறி, சிரங்கு!
-கெர்சோம் செல்லையா.
www.thetruthintamil.com
ஒரு முறைக்கிருமுறை பார்ப்பது நலமே.
தெரு இடம் இருக்க, போனது வலமே.
மறுமுறை நோக்கித் திருந்தும் மனமே,
இருமுறை பிறக்கும் இறையின் இனமே!
-செல்லையா.
பொய்யா? மெய்யா?
உள்ளே இருப்பது துரும்பு.
ஊரில் உரைப்பது இரும்பு.
வெள்ளி, பொன்னாய் நினைத்து,
விழாதீர், அலகை அணைத்து.
எள்ளிலிருப்பது எண்ணெய்;
எடுக்கும் உழைப்பே உண்மை.
கொள்ளி வைக்கும் பொய்மை.
கொள்வீர் இறையின் மெய்மை!
-கெர்சோம் செல்லையா.
மதிக்கு நீதி கிடைக்குமா?
அழுது கொண்டே உயிர் விட்டாள்.
அவளுக்கு நீதி கிடைக்கவில்லை.
தொழுது கொண்டே தாய் கேட்டாள்.
தாய்க்கும் நீதி கிடைக்கவில்லை.
எழுதி வைக்கிற விதி என்பார்.
இங்கும் நீதி கிடைக்கவில்லை.
பழுது எங்கே? பகுத்தே பார்.
பாராவிடில், கிடைப்பதில்லை!
–செல்லையா.
நல்வழி:
அன்பே இறைவன் என்று மொழிவார்;
ஆயினும் அன்பை அவர் பொழியார்.
தந்தை கடவுள் என்றும் விளிப்பார்;
தமது செயலால் மகன் பழிப்பார்.
இன்றே தவற்றை உணர்ந்திடுவார்,
இயேசுவோடு பிணைந்திடுவார்.
நன்றாய் அன்பில் வளர்ந்திடுவார்,
நலமிலா தீதும் களைந்திடுவார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
நல்வழி:
தந்தையர் நேர்மையைப் போற்றியுரைத்தல்,
தவறு என்று சொல்லேன் நான்.
முந்தையர் விதைத்த நன்மையின் பயனை,
முழுவதும் இன்று அறுப்பவன் யான்.
மைந்தனாய் தந்தையின் பண்பைக் கொண்டு,
மனிதருக்கென்ன செய்தேன் நான்?
எந்தையிறையே, என்னைத் தந்தேன்;
இயேசு போன்று நடக்கத்தான்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
பெற்றோர் சொல்லித் தந்தது என்ன?
நற்செய்தி: யோவான்: 8:37-38.
நல்வழி:
பெற்றோர் சொல்லித் தந்தது என்ன?
பெரியோர் என்பின் சிந்திப்பீர்.
கற்றோர் என்றால் கொலை செய்வாரா?
கயமை வெறியினை நிந்திப்பீர்.
தொற்றாதிருக்கிற நற்பண்பென்ன?
தூயோன் இயேசுவைச் சந்திப்பீர்.
உற்றார் உறவாய் யாவரும் வருவார்;
ஒவ்வொருவரையும் மன்னிப்பீர்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.