நம்பிக்கையுள்ளோர் வாய் மூடார்!

நம்பிக்கையுள்ளோர் வாய் மூடார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:21-23.

21 ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
22 அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகை காட்டி ஊமையாயிருந்தான்.

கிறித்துவில் வாழ்வு:
நம்பிக்கையுள்ளோர் வாய் மூடார்;
நற்செய்தியன்றி அவர் பாடார்.
கும்பிடும் கையில் பொருள் நாடார்;
கோடி கொடுப்பினும் பின் ஓடார்.
வம்பும் வாதும் இனி கேளார்;
வாய்மையற்றோர் முன் தாழார்.
அம்புகள்வரினும் அவர் மாளார்;
அவரை வெறுப்பவர்தான் வாழார்!
ஆமென்.

Image may contain: text
Gershom Chelliah

எப்படி நடக்கும்?

எப்படி நடக்கும்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:18-20.
18 அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.
19 தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
20 இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
எப்படி நடக்கக் கூடும் என்று,
இறைவாக்கினை நாம் புறக்கணித்தோம்.
இப்படி எத்தனை பயன்களிழந்தோம்;
எண்ணிப் பார்த்து அரவணைப்போம்.
தப்பிதம் எதுவும் பற்றினில் வேண்டாம்;
தந்தை இறையை நம்பிடுவோம்.
அப்படி வரினும், அவைகள் ஒழியும்;
ஆண்டவர் வழியில் கும்பிடுவோம்!
ஆமென்.

Image may contain: cloud, text and nature
 

திருப்பும் ஆண்டவரே!

திருப்பும் ஆண்டவரே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1 :16 -17

16 அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
17 பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
தெய்வத்தின் ஆவி திருத்தாவிட்டால்,
தெளிவற்றவர்கள் திருந்தார்கள்.
பொய்மையின் ஆவி பொய்க்காவிட்டால்,
புனிதருரைப்பினும் வருந்தார்கள்.
மெய்யெது, பொய்யெது அறியா மக்கள்;
மேன்மை எப்படி பெறுவார்கள்?
ஐயனின் மீட்பு அரிதென்றுணர்ந்தேன்;
ஆவியரால்தான் வருவார்கள்!
ஆமென்.

Image may contain: outdoor
LikeShow More Reactions

Comment

Comments
Gershom Chelliah
Write a comment…

ஆவியில் நிறைந்தவர்!

No automatic alt text available.
ஆவியில் நிறைந்தவர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:15.
15 அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.”
 
கிறித்துவில் வாழ்வு:
ஊனுடல் உள்ளோர் இறைமுன் நின்று,
உயர்ந்தோர் தாமென உரைப்பாரோ?
வானுயர் நேர்மை கொண்டோர் என்று,
வாயினில் வாக்கும் நிறைப்பாரோ?
மானுடர் எவரும் கூறிடமாட்டார்.
மனிதர் தகுதியில் குறைந்திட்டார்.
நாணிடும் நம்முன் யோவான் நின்றார்;
நல்லாவியரால் நிறைந்திட்டார்!
ஆமென்.

மகிழ்வீதலே நமது பயன்!

மகிழ்வீதலே நமது பயன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:11-14.

11 அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
12 சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
13 தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
14 உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

பிறந்தபோது நம்மில் மகிழ்ந்த,
பெற்றோர் இன்று அழுவது ஏன்?
திறந்த வெளியில் திரியும் இவர்கள்,
தேடும் இல்லம் வளர்வது ஏன்?
இறந்த காலத் தவற்றை முடித்து,
இன்பம் வழங்க மறுப்பது ஏன்?
மறந்த எவரும் மகிழ்ந்ததில்லை;
மகிழ்வீதலே, நமது பயன்!
ஆமென்.

No automatic alt text available.

விண்வழி அறிவீர்!

விண்வழி அறிவீர்!

வல்லவர் வகுப்பது வாய்மையாயின்,
வாழ்க்கையும் உண்மையில் பொய்மையே.
நல்லவராக நடப்பவர் குறைவார்;
நடிப்பவர் உயர்வார் மெய்மையே.
சொல்பவர் செய்தவராயெனப் பார்த்துச்
சொல்லை ஆய்தல் தன்மையே.
வெல்பவர் உரைக்கும் வேதம் வேண்டாம்;
விண்வழி அறிவீர் நன்மையே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 11 people, people standing and text

பார்ப்போம் இறையை நன்றேயாம்!

பார்ப்போம் இறையை நன்றேயாம்!
கிறித்துவின் வாக்கு:லூக்கா 1 :10
“தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.”
கிறித்துவில் வாழ்வு:
விழுதுகள் வேறாய்த் தெரிந்தாலும்,
வேர்மேல் மரமோ ஒன்றேயாம்.
தொழுதிடும் முறைகள் விரிந்தாலும்,
தொழப்படும் இறையோ ஒன்றேயாம்.
கழுவிடும் சடங்கென எரிந்தாலும்,
கடவுளின் வழியோ ஒன்றேயாம்.
பழுதுள்ளவராய்த் திரிந்தாலும்,
பார்ப்போம் இறையை நன்றேயாம்!
ஆமென்.

Image may contain: tree, plant, outdoor and nature

இணைக்கும் பாலம்!

இணைக்கும் பாலம்!
கிறித்துவின் வாக்கு: மாற்கு 1:8-9.
“அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில், ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்.”

கிறித்துவில் வாழ்வு:
இணைக்கும் பாலமே பாதிரியாவார்;
இறையுடன் இணைக்க, மாதிரியாவார்.
அணைக்கும் இறையின் பண்பாயிருப்பார்;
அனைவரிடத்திலும் அன்பாயிருப்பார்.
பிணைக்கும் பணியில் பிழைகள் பொறுப்பார்.
பெரியவர் சிறியவர் பிரிவினை வெறுப்பார்.
நினைக்கும் யாவரும் இவரைப் புகழ்வார்;
நேர்வழி விரும்பாதவரே இகழ்வார்!
ஆமென்.

Image may contain: bridge, plant and outdoor

யோகக் கலையும் பிறவகைப் பயிற்சிபோன்று ஒருவகை உடற்பயிற்சியே. உடலைக் கட்டுப்படுத்தமுயல்வதால், ஒருவரால் தன் பொருளையும் ஆவியையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்க இயலுமா? இயலாதே! ஒருவன் கிறித்துவுக்குள் வந்தால், அவன் கிறித்து ஆவியின் ஆளுகைக்குள் வருகிறான். இறைவனின் ஆவி இவனது ஆவியைக் கட்டுப்படுத்துகிறது; இவனது பொருளைக் கட்டுப்படுத்துகிறது;இப்படியாய் இவனது உடலையும் கட்டுப்படுத்துகிறது. இப்படிப்பட்டவன் எல்லா அறிவுக்கும் அப்பாற்பட்ட அமைதிபெற்று மகிழ்கிறான். கீழிருந்து முயல்வதைவிடவும், மேலிருந்து பெறுவதே எப்போதும் பெரிதாம். பயிற்சிகளின் பட்டறிவில்தான் இதை எழுதுகிறேன்.

-கெர்சோம் செல்லையா.

Yoga can be considered as a form of physical exercise, like other exercises. Can our control of body (by yoga or by any other form of exercise) result in controlling our soul and spirit? Never! On the other hand, if we are in Christ, His Spirit reigns on us. This means the Spirit of God controls our spirit and our soul, and thereby our body. The results is, we have peace, that surpasses all our understanding. Getting from above is always greater than seeking from below! This is my experiment with exercises!
– Gershom Chelliah.

வேண்டல் ஒரு நாள்

 
வேண்டல் ஒரு நாள் கூடிவரும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:5-7.
“யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து.
அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள்.”
கிறித்துவில் வாழ்வு:
நீண்ட நாளின் விண்ணப்பம்,
நிறைவேறாது இருந்தாலும்,
ஆண்டவரின் நன்மக்கள்,
அண்டிக் கொள்வது அறமாகும்.
வேண்டல் ஒருநாள் கூடிவரும்;
விரும்பும் நன்மை தேடிவரும்.
தோண்டத் தோண்ட அருளூற்று,
தூயோர் வாழ்வில் உறவாகும்!
ஆமென்.