ஒளி நாள் வாழ்த்து!
ஒளியாம் இறையை உண்மையில் உணர்ந்து,
ஒழுக்கம் வளர வாழுங்கள்.
வெளி ஆள் என்று வெடி கொளுத்தாது,
விளக்காய் ஒளிர வாழ்த்துகள்!
-கெர்சோம் செல்லையா.

The Truth Will Make You Free
ஒளி நாள் வாழ்த்து!
ஒளியாம் இறையை உண்மையில் உணர்ந்து,
ஒழுக்கம் வளர வாழுங்கள்.
வெளி ஆள் என்று வெடி கொளுத்தாது,
விளக்காய் ஒளிர வாழ்த்துகள்!
-கெர்சோம் செல்லையா.

ஊரார் நேர்மைக்கு ஏங்குகிறார்!
கற்றவர் என்று கணக்கைக் காட்டி,
காசால் பதவியை வாங்குகிறார்.
மற்றவர் படுந்துயர் உணராதவராய்,
மடியராய்ப் பணியில் தூங்குகிறார்.
ஒற்றைக் காசையும் உருவி எடுத்து,
ஊழலில் தலைமை தாங்குகிறார்.
உற்றவருக்கே உதவி என்றானதால்,
ஊரார் நேர்மைக்கு ஏங்குகிறார்.
-கெர்சோம் செல்லையா.


தூயவர் இரக்கம் தொடரக் கேட்போம்!
கிறித்துவின் வாக்கு; லூக்கா 1:49.
49 வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.
கிறித்துவில் வாழ்வு:
தூயவர் இரக்கம் தொடரக் கேட்போம்;
தூய்மை வாழ்வில் படரக் கேட்போம்.
மாயம் செய்யும் மனிதர் முன்னில்,
மாண்பாய் வாழப் புனிதம் கேட்போம்.
பேயவன் வலையை அறுக்கக் கேட்போம்;
பேரரசாயினும் நொறுக்கக் கேட்போம்.
ஆயராம் இயேசு அதனைச் செய்ய,
அமைதியாக, முதலில் கேட்போம்!
ஆமென்.

மெய்ப்பொருள் தேடுவீர்!
தோண்டி எடுத்தால் தொன்மை தெரியும்;
தோண்டிடவோ இங்கு ஆளில்லை.
வேண்டிக் கேட்கும் நாட்டோர் இருந்தும்,
வெட்டி எடுக்கவோ நாளில்லை.
மாண்டு போனோர் வரலாறிழந்தால்
மனிதர் தெளிவுற வாய்ப்பில்லை;
மீண்டும் மீண்டும் எழுதுகின்றேன்;
மெய்ப்பொருள் தேடுவீர், ஏய்ப்பில்லை!
-கெர்சோம் செல்லையா.

கல்தோன்றி, மண்ணைக் காணாக்
காலத்துச் செய்தி வந்தால்,
இல்லென்று இழுத்து மூட,
இங்கேதான் அரசு உண்டே.
சொல் என்று சொல்பவர்கள்
சொற்களில் உண்மை காணேன்.
வெல்பவர் இதனால் வீழ்ந்தார்;
விதியாக்கி விட்டார் பண்டே!
-கெர்சோம் செல்லையா.
அடிமையின் தாழ்வில்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:46-48.
46 அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.
47 என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.
48 அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
அடிமையாய்க் கிடப்போரையும்
அன்புடன் பார்ப்பவர் யார்?
கடினமாய் நடத்துவோரும்
கனிந்திடச் சேர்ப்பவர் யார்?
முடிவிலா நன்மை ஈந்து
முற்றிலுமாய் மீட்பவர் யார்?
பிடிபடா என்னைப் பிடித்த
பேரரசர் இறைமகனார்!
ஆமென்.

பற்றுறுதி கொள்வது பேறு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:39-45.
39 அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய்,
40 சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
41 எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,
42 உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
43 என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது.
44 இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.
45 விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
கிறித்துவில் வாழ்வு:
பற்றுறுதி கொண்டவர்கள்
பெற்றிடுவார் பேறு.
மற்றவரோ வீழ்ந்திடுவார்,
கற்றறிந்து கூறு!
சுற்றியுள்ள தீவினைகள்
அற்றுவிழ நாடு.
கொற்றவரின் குடைநிழலில்
வெற்றியுண்டு, பாடு!
ஆமென்.

உமது வாக்கின்படியே ஆகட்டும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:38.
38 அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.
கிறித்துவில் வாழ்வு:
நிந்தை அவச்சொல் நெடுங்கதையாய் வரும்;
நிம்மதி குலைக்கும் உறவுகளே தரும்.
இந்த நிலையைப் புரிந்த எவரும்,
ஏற்பாரோவென நீவிரே கூறும்.
தந்தை இறையின் வாக்கே போதும்;
தவறு வராது அதில் எப்போதும்.
எந்தத் துன்பம் எவர் தந்தாலும்,
இறையின் விருப்பே நன்மையாகும்!
ஆமென்.


கூடும், இறையால் கூடும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:36-37.
36 இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.
37 தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
தேடும் கடவுளைத் தேடும்;
தெளிவு பெறவே தேடும்.
கூடும், யாவும் கூடும்;
கிறித்து அருளால் கூடும்.
ஓடும், பகைமை ஓடும்;
உண்மை வெல்ல, ஓடும்.
நாடும், வலுவை நாடும்;
நாடும் வாழ, நாடும்!
ஆமென்.
