ஏன் இறைவன் மனுவாய்ப் பிறந்தார்?
என்கிற கேள்விக்குப் பதிலென்ன?
வான் விடுத்து எவர்தான் வருவார்?
நான் என்கிற தீவினை பெருத்து,
நானிலம் கெட்டு விழுந்ததினால்,
தான் பெற்ற மக்களை மீட்க,
தந்தையன்பாய் மகனளித்தார்!
(யோவான் 3:16)

The Truth Will Make You Free
இப்படி இவர்கள் எழுதிய நூற்கள்,
இசரயெல் என்று இருந்தாலும்,
ஒப்பிட இயலா இறையின் திட்டம்,
உலகம் முழுதும் மீட்பதுதான்.
அப்படி மீட்க வருபவர் குறித்து,
அறிவிக்கும் முன் வாக்குகளில்,
தப்பிதமென்று ஒன்றும் இல்லை;
தரணி மீளக் கேட்பதுதான்!
www.thetruthintamil.com