தொழு நோயாளரையும் தொட்டுச் சேர்க்கும் அன்பு!
நற்செய்தி மாலை: மாற்கு 1:40-41.
“ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ‘ நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் ‘ என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், ‘ நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! ‘ என்றார்.”
நற்செய்தி மாலை:
தொற்றும் நோயில் கொடிய,
தொழுநோய் கொண்டு மடிய,
சற்றும் விரும்பா ஒருவர்,
சட்டம் மீறி வந்தார்.
முற்றும் வெறுக்கும் நிலையே;
மும்மை இறையில் இலையே.
பற்றின் உறுதி கண்டார்;
பரிவில் சேர்த்துக் கொண்டார்!
ஆமென்.
Category: நற்செய்தி
எங்கும் சொல்வோமா?
எங்கும் சொல்வோமா?
நற்செய்தி மாலை: மாற்கு 1:38-39.
“அதற்கு அவர், ‘ நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன் ‘ என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.”
நற்செய்தி மலர்:
எங்கே, எப்படி, யாருக்கு,
எடுத்துச் சொல்ல அழைப்பீரோ,
அங்கே, அவரது மீட்பிற்கு,
அருளைத் தராது இருப்பீரோ?
இங்கே காணும் இருளிற்கு,
என்னை விளக்காய் மாற்றீரோ?
மங்கா ஒளியைக் கொடுப்பதற்கு,
மெழுகாய் உருக்க மாட்டீரோ?
ஆமென்.
கொல்லச் சொல்பவன் கடவுளா?
கொல்லச் சொன்னாரா இறைவன்?
கொல்லச் சொல்பவன் கடவுளல்ல;
கொலைகாரன் என அறிவோமே.
நல்லதைச் செய்பவர்தான் கடவுள்;
நன்மை செய்து வாழ்வோமே!
கல்லா மனிதர் இதை உணர,
கடவுளின் செய்தி கொடுப்போமே.
எல்லாத் தீமையும் தீர்ப்பில் வரும்;
இறைவனின் அன்பில் மகிழ்வோமே!
– கெர்சோம் செல்லையா.


யாரைத் தேடுகிறோம்? என்ன தேடுகிறோம்?
யாரைத் தேடுகிறோம்? என்ன தேடுகிறோம்?

கருக்கலில் எழுந்து கடவுளை நோக்கும்…
நற்செய்தி மாலை: மாற்கு 1: 35.
“இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.”
நற்செய்தி மலர்:
கருக்கலில் எழுந்து கடவுளை நோக்கும்
கண்கள் வேண்டும், கேட்டிடுவோம்.
இருக்கும் துன்பம் எங்கோ பறக்கும்,
இறையுள் இணையும், ஓட்டிடுவோம்.
பெருக்கும் செல்வம் பகிர்ந்து கொடுக்கும்,
பேரூற்றினை நாம் தோண்டிடுவோம்!
தெருக்கல் போன்று போகாதுரைக்கும்
திறமை ஒழியும், தாண்டிடுவோம்.
ஆமென்.

நலம் தரும் இயேசு!
நலம் தரும் இயேசு!

சேயினைப் போன்று பற்றிடுவோம்!
“பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.”

இப்படி எவரும் பேசவில்லை!
“அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ‘ இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! ‘ என்று தங்களிடையே பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.”
நற்செய்தி மலர்:
இப்படி எவரும் பேசவில்லை;
இவர் பேச்சிற்கோ எதிர்ப்புமில்லை.
அப்படிப் பேசி வாழ்ந்ததினால்,
அவரது புகழிற்கு எல்லையில்லை.
எப்படியென்று கேட்கும் நாம்,
இயேசு போல வாழவில்லை.
தப்பிதம் நீங்க நமைக் கொடுத்தால்,
தருவார் நமக்கும் இந்த நிலை!
ஆமென்.

தீயோன் ஓடுதல் பார்!
தீயோன் ஓடுதல் பார்!

தீயோன் அறிவான்,
நற்செய்தி மாலை: மாற்கு: 1:23-24.
“அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, ‘ நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ‘ என்று கத்தியது”.
நற்செய்தி மலர்:
தீயோன் அறிவான், திருடனும் அறிவான்,
தெய்வ மைந்தன் இயேசென்று.
நீ யார் என்று நம்மவர் கேட்கும்,
நிலையை இங்கு பாரின்று!
பேயோன் பிடியில் இருப்பவர் மீள,
பிழை உணர்வாய், இது நன்று.
சேயாய் நாமும் வாழ்ந்தால்தானே,
சிறக்கும் தெய்வப் பணி வென்று!
ஆமென்.
