அடிமையர் துன்புறும் அந்த நாளில், 

அவரிலொருவன் ஓடிச் சென்றான்.

எடுபிடி வேலை பவுலுக்குச் செய்து,

இறைமீட்பும் கண்டு நின்றான். 

கொடிய சட்டம் நெருக்கிடும் நிலையில், 

கொடுக்கிற கடிதம் யாரை மாற்றும்? 

ஒடுக்கா பிலமோனின் அன்பு வலையில், 

ஒநேசிமியர் விடுதலை சாற்றும்!

(பிலமோனுக்கு எழுதிய திருமுகம்).