எழுபத்தி ஐந்து ஆண்டுகள் முடித்து,
இன்னொரு நாளைக் காணுகிறேன்.
இழுத்திட்ட நட்பின் விருப்பம் எடுத்து,
இயங்கியதால் வழி கோணுகிறேன்.
பழுத்தவன் எனினும், பழிப்பிழை பிடித்து,
படைத்தவர் முன்னே நாணுகிறேன்.
அழைத்திடும் இயேசு நீட்டிக் கொடுத்து,
ஆளுவதால் அன்பு பூணுகிறேன்!
-கெர்சோம் செல்லையா.