நீண்ட நெடியக் கடிதங்கள் எழுதி,
நிறைவேற்றும் பவுல் ஊழியம்,
தாண்ட முடியாத் தடைகள் உடைக்க,
தலைவன் அருளும் வாழ்வியம்.
ஆண்ட அரசர்கள் அனைவரும் போனார்;
அப்போத்தலனோ வாழ்கிறார்.
ஈண்டு இதனை ஏற்று பணிந்தார்,
இறையுடன் அரசாள்கிறார்!
(தீமோத்தேயு & தீத்து கடிதங்கள்)