2026–ஆண்டின் தேர்தல்!
தேறுதல் தருகிற தலைவர் என்று,
தேர்தலில் வாக்கு அளிக்கிறோம்.
மீறுதல் செய்வார், மிரட்டவும் வருவார்;
மீட்பார் இலாது முழிக்கிறோம்.
மாறுதல் என்றால் மாயையே இன்று!
மனம் தளராது விளிக்கிறோம்.
ஆறுதல் வேண்டும்; யார் இனி தருவார்?
ஆண்டவர் ஆளச் செழிக்கிறோம்!
-கெர்சோம் செல்லையா.
www.thetruthintamil.com