எது எது வேண்டும் என்று நான் விரும்பி,

இறையிடம் பட்டியல் போடுகிறேன்.

அது அது வந்தும், வராமல் இருந்தும்,

ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

இது இது இறைவன் விருப்பென்றறிந்து,

என்னைத் தந்து தாழுகிறேன்.

புது புது பொருளைப் பொழிந்து நிரப்பும், 

புனிதரருளால் வாழுகிறேன். 

(மாற்கு: 14:32-40).