திரள் கூட்டமாய் மனிதர் அன்று, தேவை முழுக்கு என்றது போல், அருள் ஊட்டிடும் இயேசுவும் நின்று, அப்படி முழுக வேண்டுமோ? மருள் போக்கிடும் பணிக்கென வந்து, மனுவில் ஒன்றி நின்றது போல், இருள் நீக்குவார் எவரும் இல்லை; இதை அறிய வேண்டுமே! (மத்தேயு 3:13-15)
பாறைகள் உடையட்டும்! அடி பட்டிறக்கும் மனிதரைப் பார்த்து, அவர் செயல் முடிவு என்கிறோம். பிடி பட்டிராத நம் வினை சேர்த்து, பெருமை பேசித் தின்கிறோம். தடி கொண்டிறைவன் தடுத்தாலன்றி, தம் பிழை திருத்த மறுக்கிறோம். வெடி வைத்துடைத்துக் கொடுப்பாரின்றி, வெளி வரா நீராய் இருக்கிறோம்! -கெர்சோம் செல்லையா. www.thetruthintamil.com
விபத்து! வான் பறக்க முயன்ற ஊர்தி, வந்து வீழ்ந்தது அதிர்ச்சி. தான் சிறக்க வாழ எண்ணி, தரை முட்டிய முயற்சி. ஏன் இழந்தோம் என்று கேட்க, ஏற்ற பதில் இலையே. நான் இருக்க இவர் பறக்க, நடைபயணம் வலியே ! www.thetruthintamil.com -கெர்சோம் செல்லையா.
திரண்டு வந்த பெருங் கூட்டத்தார், திருந்தி வாழ விரும்புகிறார். முரண்டு நிற்பது வேண்டாமென்று, முழுகி யெழுந்து, திருந்துகிறார். இரண்டு உள்ளோர் ஒன்று கொடுத்தார்; ஏழைக்கிரங்க முன் வந்தார். புரண்டு தூங்கும் புரியாதினத்தார், போக்குரைத்து, பின் நொந்தார்! (லூக்கா 3:1-18)
மொத்தப் பொருளும் தமக்கெனக் கண்டு, மோதித் திரிகிற உலகிடம், பத்தில் ஒன்றை இறைமுன் கொண்டு, படைக்கக் கேட்டது முதலுரை. அத்துடன் நிறுத்தும் திருந்தார் கண்டு, அவரை அழைக்க நல்லிடம், சத்துணவளிக்கும் காடெனக் கொண்டு, சரிபாதி கேட்குது நடுவுரை! (லூக்கா 3:1-18)
தேனூறு வாக்குகள் தெய்வம் தந்தும், திருந்தாதிருந்தார் அந்நாட்டார். வானூறு மேகம் பொழிந்து ஈந்தும், வறண்டிருந்தார் இறை வீட்டார். நானூறு ஆண்டுகள் மௌனம் காத்தும், நல்லிறையோ கை விட மாட்டார். பானூறு பாடி, அவர் புகழ் சாத்தும், பாலைக் காட்டில் உரைத்திட்டார்! (லூக்கா 3:2)
பதினெட்டாண்டு காலச் செய்தி, படிக்கக் கிடைக்காததால், விதிகள் கற்க வேறு நாடுகள் விரைந்தாரென்றும் எண்ணுவர். மதிநிறை இயேசு எங்கிருந்தாலும், மாபெரும் அறிவு வல்லுநர். இது கண்டறிய இறைநூல் கற்போம்; ஏற்பாருள்ளிலும் பண்ணுவர்! (லூக்கா 2).
வந்து தேடிய பெற்றோர் உணரா, வாய்மொழி சொன்னார், கேட்டீரோ? தந்தையிறைக்குத் தகுவது செய்தல், தம் கடமை, விட மாட்டீரோ? நொந்து பெற்ற தாய் உள் வைத்தாள்; நினைவுபடுத்தினேன், ஏற்பீரோ? இந்த வாழ்க்கை, இறைவனுக்காகும்; எண்ணார் வாழார், பார்ப்பீரோ? (லூக்கா 2)
பன்னிரு ஆண்டுகள் முடிந்தது கண்டு, படைத்தோன் கோவில் சென்றனர். நன்னிறை நல்கிய நன்மைக்கென்று, நற்பலி செலுத்தி நின்றனர். பின்வருவாரென எண்ணிக் கொண்டு, பெற்றோர் திரும்பி வந்தனர். என்னிறை மகனோ அறிஞரின் முன்பு, எண்ணா அறிவைத் தந்தனர்! (லூக்கா 2)
அரசனும் ஆட்சியும் மாறிய பின்னர், அவர்கள் திரும்பி வந்தார்கள். உரசலும் புரசலும் இல்லா அன்பர், என்ற நற்பெயர் தந்தார்கள். பருவமும் உருவமும் வளரும் முன்னர், பண்பை நிறைத்து ஈந்தார்கள்; ஒருவரும் அடையா உயர்ந்த அறிவில், ஓரிறை கண்டு மீந்தார்கள்! (லூக்கா 2)