ஒளிவு மறைவில்லை!

ஒளிவு மறைவில்லை!

இறை மொழி: யோவான் 18: 19-21.

19. பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.

20. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெபஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.

21. நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.

இறை வழி:

தெளிவு தேடும் என் நாட்டாரே,

தெய்வ வாக்கு கேளுங்கள்.

ஒளிவு மறைவு ஒன்றும் இல்லை;

உளம் திறந்து கேளுங்கள்.

பொழிவு நாடும் என் வீட்டாரே,

பொய்மை விட்டு வாழுங்கள்.

அழிவு கண்டு அழுபவர் உண்டு,

அன்பில் மீட்டு வாழுங்கள்!

ஆமென்.

May be an image of text that says 'There is no hidden agenda in my life. I want a good life with good deeds. -Venkatesh SR SR Your uote.in'

அவன் நானில்லை!

அவன் நானில்லை!

இறை மொழி: யோவான் 18:17-18.

17. அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் அல்ல என்றான்.

18. குளிர்காலமானபடியினாலே ஊழியக்காரரும் சேவகரும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களுடனே கூடப் பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.

இறை வழி:

நீயும் இயேசுவின் அடியான்தானே?

நேர்மையோடு பதில் சொல்வாய்.

பேயும் கூட இதனைச் சொல்லும்;

பிறகு எதற்கு மறுத்தாய்?

தேயும் வாழ்வில் உண்மை வேண்டும்;

தெரிந்தும் நீ பொய் சொன்னாய்.

ஆயும் ஆவியர் அனலில் புகுந்து,

அடியோடுன்னை வெறுப்பாய்!

ஆமென்.

May be an image of 4 people

இன்னொரு அடியார்!

இன்னொரு அடியார்!

இறை மொழி: யோவான் 18:15-16.

15. சீமோன்பேதுருவும் வேறொரு சீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான்.

16. பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான்.

இறை வழி:

இன்னொரு அடியான் என்றே கூறி,

யோவான் யாரை மறைக்கிறார்?

தன்னை மறைத்துக் காட்டும் நற்பணி

தாழாதுயரச் சிறக்கிறார்.

என்னில் உண்டோ என்று பார்த்தும்,

இழிவெண்ணத்தைச் சிதைக்கிறார்.

முன்னால் நிற்பவர் ஏற்காரெனினும்,

முதற்கண் என்னில் விதைக்கிறார்!

ஆமென்.

May be an illustration

ஒருவரைக் கொல்லல்!

ஒருவரைக் கொன்று..

இறை மொழி: யோவான் 18:12-14.

12. அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி,

13. முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான்.

14. ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.

இறை வழி:

ஒருவரைக் கொன்று ஊரைக் காப்பதும்,

ஊரை அழித்து நாட்டை மீட்பதும்,

பெருமதி பெறாத பேதையர் கருத்து;

பிழை உணர்ந்து உள்ளம் திருத்து.

இருவரோ மூவரோ எண்ணிக்கை அல்ல;

யாவரைக் காப்பதே இறையின் நல்ல,

விருப்பெனக் கண்டு பணிவாய் இன்று;

விண் அருளில் வாழ்வோம் நன்று!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

No photo description available.

வாள்!

வாள் !


இறை மொழி! யோவான் 18:10-11.



10. அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர்.

11. அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.

இறை வழி:

வீழ் என்று நினைப்போர் முன்பு, 
விழேன் என்று எதிர்ப்பதற்கு,
வாள் எடுக்கும் மனிதர் உண்டு.
வரலாறு கதை சொல்கிறது.
சூழ் என்று அணைக்கும் அன்பு,
சொல்லும் மீட்பு விதிப்பதற்கு, 
தாள் பணிதல் புனிதர் பண்பு;
தாழ்மை ஆவி வெல்கிறது!


ஆமென்.

-கெர்சோம் செல்லையா. Activate to view larger image,

Image preview

Activate to view larger image,

அழகும், பேரழகும்!

அழகும், பேரழகும்!

ஓடுதல் ஆற்றிற்கு அழகு.

ஒடுங்குதல் ஊற்றிற்கழகு.

பாடுதல் பறவைக்கு அழகு.

பாய்தலே விலங்கிற்கழகு.

கூடுதல் மனிதர்க்கு அழகு;

கொடுப்பதே நமக்கழகு.

தேடுதல் அறிவியல் அழகு.

தெரியும் இறை, பேரழகு!

-கெர்சோம் செல்லையா.

May be an image of deer

நானே அவர்!

நானே அவர்!

இறை மொழி: யோவான் 18: 6-9.

6. நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.

7. அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள்.

8. இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார்.

9. நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லையென்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.

இறை வழி:

தானே வந்து முன்னால் நிற்கும்,

தலைவன் துணிவை பாருங்கள்.

நானே அவர் என்பதைக் கூறும்,

நல்லிறைப் பண்பும் பாருங்கள்.

வீணே என்று விட்டு விட்டோடும்,

வீம்புத் தலைகளும் பாருங்கள்.

ஏனோ தானோ எனும் வழியல்ல;

இறையேசு பாதை சேருங்கள்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

May be an image of text that says 'AS SOON THEN AS He HAD SAID UNTO THEM THEY WENT AM BACKWARD, AND FELL TO THE GROUND John 18:6'

துணிவு!

தேடுவோர் முன்!

இறை மொழி: யோவான் 18:4-5.

4. இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.

5. அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான்.

இறை வழி:

கொல்ல வருபவர் என்றே அறிந்தும்,

கொடுக்க இயேசு முன் சென்றார்.

நல்ல எண்ணம் கொள்ளார் வந்தும்,

நன்மையாக்கவே, அவர் சென்றார்.

எல்லை இல்லா அன்பை ஈந்தும்,

எதிர்ப்பார் கொல்லவே நின்றார்.

சொல்லை அறியார் பெருத்திருந்தும்,

சொன்ன சொல்லாய் இறை நிற்பார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

May be a graphic of monument

கிறித்தவருக்கும் இது பொருந்தும்!

கிறித்தவருக்கும் இது பொருந்தும்!

உன்னை ஒருவன் தாழ்ந்தோனென்றால்,

உனது நெஞ்சம் துடிக்காதா?

பின்னை எதற்குப் பிறரை விளித்தாய்?

பிழையால் கலகம் வெடிக்காதா?

தன்னை உயர்வாய் எண்ணுவதெல்லாம்,

தவறென மூளையும் படிக்காதா?

இன்னில மக்கள் யாவரும் இணையே.

இறை வாக்குனக்குப் பிடிக்காதா?

-கெர்சோம் செல்லையா.

May be an image of 4 people, child and text that says 'WE ARE... ALL EQUAL @crystalkidscenter'

இப்படை எதற்கு?

இப்படை எதற்கு?

இறை மொழி: யோவான் 18:1-3.

1. இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள்.

2. இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்.

3. யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொண்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான்.

இறை வழி:

முன்னூறு நானூறு வீரரின் கூட்டம்

முற்றுகை இடவா செல்கிறது?

அந்நூறு படையை அனுப்புந் திட்டம்,

அறிவு உடமையா சொல்கிறது?

செந்நீர் வடிக்க எண்ணும் நெஞ்சம்,

சீரிய வாழ்வைக் கொல்கிறது.

எந்நாளாயினும் வஞ்சம், வஞ்சம்;

இன்றும் மெதுவாய் மெல்கிறது!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

May be an illustration of text