என் ஆண்டவரே, என் கடவுளே!

எட்டு நாட்களுக்குப் பின்

இறை மொழி: யோவான் 20:26-28.

26. மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

27. பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.

28. தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.

இறை வழி:

எட்டு நாள் வரை விட்டுக் கொடுத்து,

இறை மகன் காட்சி கொடுக்கிறார்.

கெட்டு, இழந்து போதல் தடுத்து

கிறித்து அடியரை அடுக்கிறார்.

மட்டு தொடாத மகிழ்ச்சியில் அடியர்

மயக்கம் தெளியக் களிக்கிறார்.

கட்டு படுத்தாப் பற்றில் துடியர்,

கடவுளே என்று விளிக்கிறார்!

ஆமென்.

May be an image of 3 people and text that says 'Thomas answered and said to Him Lord and my God John 20:28 Knowing-Jesus.com'

நம்பு!

நம்பாமை!

இறை மொழி: யோவான் 20:24-25.

24. இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.

25. மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.

இறை வழி:

தும்பை பூக்கள் வெண்மை என்றால்,

தூய நெஞ்சே நம்பு.

வம்பை வளர்த்தல் தீது என்றால்,

வாதிடாமல் நம்பு.

அம்பும் வில்லும் வேண்டாமென்றால்,

அறிவுலகே நம்பு.

நம்பிக்கைதான் வாழ்வு என்றால்,

நண்பா நீயும் நம்பு!

ஆமென்.

No photo description available.

பொறுத்திடும் திருப்பணி!

பொறுத்திடும் திருப்பணி!

இறை மொழி: யோவான் 20:21-23

21. இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,

22. அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;

23. எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.

இறை வழி:

வெறுத்திடும் மனிதர் பெருத்திடும் போது

விண் மகன் ஊழியம் வழங்குகிறார்.

பொறுத்திடும் பண்பை வளர்த்திடும் தூது,

புனித ஆவியால் வழங்குகிறார்.

மறுத்திடும் பேச்சு சொல்பவர் வாது,

மறையும்படிக்கே வழங்குகிறார்.

திருந்திடுவோமெனில் தீமை வெல்லாது.

தெய்வப் பண்பே வழங்குகிறார்!

ஆமென்.

May be an image of 1 person and text that says '"Without forgiveness there is no future."'

அமைதி!

அமைதி!

இறை மொழி: யோவான் 20:19-20.

19. வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

20. அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.

இறை வழி:

அடையாத பொருட்கள் இங்கிருப்பின்,

அவற்றில் ஒன்று அமைதியாம்.

உடையாத நெஞ்சம் எங்குமில்லை;

ஊர் தராது நிம்மதியாம்.

கிடையாத மனிதர் தேடித்திரிகையில்,

கிறித்து வந்து தருவராம்.

மடையாக ஊற்றும் காயம் பாரும்;

மா அமைதி பெறுவராம்!

ஆமென்.

May be a doodle of text

முதல் அறிவிப்பாளர்!

முதல் அறிவிப்பாளர்!

இறை மொழி:யோவான் 20: 18

18. மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.

இறை வழி:

எழுந்த கிறித்துவின் உயிர்ப்பு கண்டு,

எடுத்துக் கூறும் முதல் அடியார்,

விழுந்து கிடந்த பெண்ணினம் என்று,

விண் வாக்கறிந்து, வியக்கிறோம்.

இழிந்த நிலையில் இன்றும் வைத்து,

ஏசித் திரியும் வெறி உடையார்,

பொழிந்த இறையருள் மழை நனைந்து

பொய்மை கழுவ, இயக்கிறோம்!

ஆமென்.

May be an image of 1 person and text that says 'FEATURE ST. MARY MAGDALENE She became a disciple of Jesus after He had cast seven demons out of her (Mk 16:9). She was present at the Lord's crucifixion and stood at the foot of the cross together with Jesus' Mother,St John the Evangelist and St Mary of Cleopas. She was present at the Lord's entombment and was the first to meet the Risen Christ publicly on the day of the Resurrection. catholicsknowtheanswerofficialpage'

என்னைத் தொடாதே!

என்னைத் தொடாதே!

இறை மொழி: யோவான் 20:17.

17. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

இறை வழி:

தன்னைத் தழுவும், உரிமை எடுக்கும்

தன்னலம் கண்ட இறைமகனார்,

என்னைத் தொடாது எட்டியே நில்லு,

என்கிற வாக்கின் பொருளறிவோம்.

இன்னிலம் காணும் இனிமை கொடுக்கும்;

ஈடிலா அன்பின் இறைமகனார்,

நன்மையெடுத்துப் பகிர்வதும் சொல்லு;

நல்ல சமத்துவ அருளறிவோம்!

ஆமென்.

May be an image of 2 people

கிறித்துவின் குரல்!

இயேசுவின் குரல்!

இறை மொழி: யோவான் 20:16.

16. இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.

இறை வழி:

காணாக் கண்கள் கலங்கும் நேரம்,

கடவுட் குரலொலி கேட்கிறது.

வீணாய்ப் போன விளிம்பின் ஓரம்

விரைந்து மானிடம் மீட்கிறது.

ஏனோ தானோ என்பவர் வீரம்

இறையொலி முன்னர் வீழ்கிறது.

நானே தந்தேன் என்றே கூறும்

நல் நம்பிக்கை வாழ்கிறது!

ஆமென்.

May be a graphic of text that says 'POWER THE OF GOD'S WORD'

ஏன் அழுகின்றாய்?

ஏன் அழுகின்றாய்?

இறை மொழி: யோவான் 20:15.

15. இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக் கொள்வேன் என்றாள்.

இறை வழி:

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே,

ஏன் நெஞ்சே நீ அழுகின்றாய்?

நன்னாயர் இயேசு காக்கையிலே,

நம்பாது யாரைத் தொழுகின்றாய்?

உன் கண்ணீர் கவலை நொறுக்கையிலே,

உன்னுடன் இருப்பவர் அவரல்லவா?

இன்னாளில் இதனை மறக்கையிலே,

இழப்பது வாழ்வு, தவறல்லவா?

ஆமென்.

May be an image of 1 person and text that says '"Woman, why are you weeping?" John 20,15'

காண்கிறார்… ஆயினும்

காண்கிறார்… ஆயினும் அறியவில்லை!

இறை மொழி: யோவான் 20:14.

14. இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.

இறை வழி:

இன்றும் இதுபோல் காண்கிற நாமும்

இயேசுவின் உயிர்ப்பை அறிந்தோமா?

நின்றும் குதித்தும் பாடும் போதும்,

நிலைவாழ் உயிர்ப்பு அறிவோமா?

நன்றாய்ப் பாடி, துள்ளிக் குதித்தோம்;

நற்பணி செய்யவே உயிர்த்தோமா?

அந்நாள் யாவரும் எழும்பும் காலம்,

அவருடன் ஆள உயிர்ப்போமா?

ஆமென்.

May be an image of 2 people

நம்பிக்கையோடு நிற்றல்!

நம்பிக்கையோடு நிற்றல்!

இறை மொழி: யோவான் 20:11-13.

11. மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,

12. இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.

13. அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.

இறை வழி:

நம்பும் மனிதர் நிலைத்து நின்றால்,

நன்றாய்க் காண்பர் அதிசயம்.

சும்மாச் சொல்லி செல்வது என்றால்,

சொல்லால் வருமோ அதிசயம்?

செம்மொழித் தமிழில் எழுதித் தந்தால்,

சேர்ப்பீரா இறை அதிசயம்?

இம்மாப் பற்று பெருகி வந்தால்,

யாவரும் காண்போம் அதிசயம்.

ஆமென்.

May be an image of text that says 'STAND FIRM'