பழிச் சொற்கள்!

பழிச்சொற்கள்!
நற்செய்தி: யோவான் 8:48-49. 

நல்வழி:


தொண்டு வாழ்வின் தூய்மை புரியார்,

தொண்டின் ஊற்றைத் தூற்றிடுவார். 

உண்டு கொழுப்பதை உயர்வாய் நினைப்பார்,

உண்மையைப் பொய்யாய் மாற்றிடுவார். 

கண்டு கொள்ளாதவராகத் தெரியும்,

கடவுள் நடுவாராய் வீற்றிடுவார். 

வண்டு பறப்பது போல் பழி ஓடும்;

வான் புகழாரமும் சாற்றிடுவார்! 

ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

செவி திறப்போம்!

செவி திறப்போம்!

நற்செய்தி: யோவான் 8:47.

நல்வழி:


முன்னர் படைத்தது மண்ணிற்காக. 

முதலில் இருந்தது இப்படியாக. 

பின்னர் படைப்பது விண்ணிற்காக. 

பிறப்போம் நாமும் அப்படியாக. 

இன்னரும் பேறு பெறுவதற்காக,

இரண்டு செவியும் திறப்போமாக.

சொன்னவர் இயேசு, அருள்வாராக. 

சொற்படி வாழ்ந்து சிறப்போமாக!


ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

யார் உரைப்பார்?

யார் சொல்லக் கூடும்?
நற்செய்தி: யோவான் 8:46. 

நல்வழி: 

என்னில் தீது இல்லையென்று 

என்னால் சொல்லக் கூடுமோ? 

சொன்னால் அது உண்மையென்று,

சொல்கேள் கூட்டம் ஆடுமோ?

இன்னாள் இதனைச் சொல்வதற்கு,

இயேசு தவிர யாருண்டு?

பின்னாள் அவரே நடுவரென்று,

பிழை உணரப் பேருண்டு!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.  

நம்பு!

நம்புவோமா?

நற்செய்தி: யோவான் 8:45.45.

நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.

நல்வழி:

கண்ணில் தூய்மை காணாவிட்டால்,
காட்சி எங்ஙனம் தெளிவாகும்?
புண்ணின் நெஞ்சு நாணாவிட்டால்,
புரையும் எப்படி வெளியேறும்?
மண்ணின் தீமை கொண்டவர் நாமே.
மனதின் பொய்மை கரைத்திடுவோம்.
விண்ணின் உண்மை கண்டவராகி,
விடுதலை வாக்குரைத்திடுவோம்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா. See less

நாலடி நற்செய்தி!

நாலடி நற்செய்தி!


என் ஆசிரியர்!


என்னக ஒளியில், இறையருளோடு,

பன்னிலையாளர்  தூண்டலுண்டு.

முன்னிலை  நிற்கும் என்னாசிரியர்,

நன்கு வாழ்வர், வேண்டலுண்டு!


-கெர்சோம் செல்லையா.

மெய்யும், பொய்யும்!

மெய்யும், பொய்யும்!

  1. யோவான் 8: 44.

நல்வழி: 


மெய்யின் உருவே, இயேசு. 


மேன்மை கண்டு, பேசு.

தெய்வ மகனே, இயேசு.

தெரிந்து, மெய்யைப் பேசு. 


பொய்யின் வடிவே, பிசாசு.


புரிந்து, உண்மை பேசு.

செய்யும் தீங்கும், பிசாசு.

செயலில் நன்மை, பேசு!

ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

ஏன் கேட்கவில்லை?

ஏன் கேட்கவில்லை?


நற்செய்தி:யோவான் 8:43. 43. என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?  


நல்வழி:

கல்லைக் கனியச் செய்யும் ஊற்று,

கடவுள் வாக்கு என்றாலும்,

சொல்லைக் கேட்க விருப்பம் அற்று,

சொல்லும் மகனை மறுக்கிறார். 

நெல்லுக்குயிராம் நீர்நிலை ஏற்று,

நிலங்கள் விளைந்து நின்றாலும்,

புல்லுக்கொத்தோர் பொய்மை பெற்று,  

புறம் காட்டி வெறுக்கிறார்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

ஓரினம்!

சாதிகள் நன்றோ?


முதலில் வந்த மனிதன் யாரோ?

முன்னோர் கூறும் ஆதம் பேரோ?

அதனை ஏற்பின், அவனினம் ஒன்றோ?

அப்படியாயின், சாதிகள் நன்றோ?

எதனை வாங்கக்  கோவில் சென்றாய்?

ஏன்தான் இந்தத் தீமை கொண்டாய்?

கதறி அழுகிறார்; ஏழைக்கிரங்கு.

காணும் சாதிகள், சொறி, சிரங்கு!


-கெர்சோம் செல்லையா. 

www.thetruthintamil.com

நாலடி நற்செய்தி!மறுமுறை பார்ப்போம்!

ஒரு முறைக்கிருமுறை பார்ப்பது நலமே.

தெரு இடம் இருக்க, போனது வலமே.

மறுமுறை நோக்கித் திருந்தும் மனமே,

இருமுறை பிறக்கும்  இறையின் இனமே!


-செல்லையா.

பொய்யா மெய்யா?

பொய்யா? மெய்யா?


உள்ளே இருப்பது துரும்பு. 

ஊரில்  உரைப்பது இரும்பு.


வெள்ளி, பொன்னாய் நினைத்து,

விழாதீர், அலகை அணைத்து. 


எள்ளிலிருப்பது எண்ணெய்;


எடுக்கும் உழைப்பே  உண்மை.

கொள்ளி வைக்கும் பொய்மை.

கொள்வீர் இறையின் மெய்மை!

-கெர்சோம் செல்லையா.