எது மீட்கும்?
உங்கள் பற்று உங்களைக் காக்கும்;
உண்மை நம்பி, உளம் புதிதாக்கும்.
எங்கள் மீட்பு இதனைச் சொல்லும்;
இறைவழி தானே என்றும் வெல்லும்!
-செல்லையா.
The Truth Will Make You Free
எது மீட்கும்?
உங்கள் பற்று உங்களைக் காக்கும்;
உண்மை நம்பி, உளம் புதிதாக்கும்.
எங்கள் மீட்பு இதனைச் சொல்லும்;
இறைவழி தானே என்றும் வெல்லும்!
-செல்லையா.
என்னுடன் இருக்கும் நன்னிறை!
நற்செய்தி: யோவான் 8:29.
நல்வழி:
என்னைப் படைத்து, யாவையும் கொடுத்து,
எங்கும் நடத்தும், என் இறையே,
தன்னம் தனியே தள்ளவும் தடுத்து,
தாங்கிச் சுமப்பதும் உம் நிறைவே.
இன்னிலத்தோரும் இவ்வறிவடைவார்;
இறைவழி காட்டிடும் திருமறையே.
சென்னிறக் குருதி தந்திடும் உறுதி,
சீராக்கட்டும் இவர் குறைவே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
தாழ்வு தருகிற உயர்வு!
நற்செய்தி: யோவான் 8:28.
நல்வாழ்வு:
தாழ்வில் உயர்வு, பெற்றுச் சொல்ல,
தவறாதிறை முன் வருவீரே.
வாழ்வின் மேன்மை குருசில் கண்டு,
வளமாம் தாழ்மை பெறுவீரே.
ஏழ்மை என்றும் பொருளில் அல்ல;
இறையறிவாகும், தெரிவீரே.
ஆளும் இறையின் தாழ்மை கொண்டு,
அன்பால் நன்மை புரிவீரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
இயேசு யார்?
நற்செய்தி: யோவான் 8:25-27
நல்வழி:
என்னில் எழுந்த ஐயம் தீர்த்து,
என்னை ஆளும் ஏசுவே,
முன்னில் வந்து, கேளாதிருந்து,
முனகுவாரிலும் பேசுமே.
தன்னைக் காணும் தன்மை ஈந்து,
தவற்றினின்று மீளுமே.
பின்னிக் கொண்ட, பேதைமை ஓட,
பேரறிவாலே ஆளுமே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
விண் பார்ப்போம்!
நற்செய்தி: யோவான் 8:23-24
நல்வழி:
கண்ணைக் கட்டி, காட்டில் விட்ட,
கதை போல் வாழும் மானிடா,
எண்ணத் தூய்மை எப்படிப்பட்ட,
இனிமையான தேனடா!
மண்ணைத் தேடின், மண்ணேயாகும்,
மனதின் எண்ணம் தானடா.
விண்ணைப் பார்த்து, வேண்டு தூய்மை.
விடியும் வாழ்வு வானடா!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
நற்செய்தி: யோவான் 8: 22.
நல்வழி:
உன் பிறப்பு, உன் விருப்பா?
உண்மை அது இல்லை.
என் இறப்பு, என் முடிவா?
எனக்குரிமை இல்லை.
தன் பிறப்பின் நோக்கறிவின்,
தவறுமிடம் இல்லை.
நன் வாழ்வு, நம் இறையில்;
நம்பின், குறைவில்லை!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
தீங்கின் முடிவு!
நற்செய்தி: யோவான் 8:20-21.
20. தேவாலயத்திலே இயேசு உபதேசம்பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.
21. இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார்.
நல்வழி:
தீங்கை விற்கும் தீமையாளர்,
தெய்வ மீட்பை வாங்காரே.
ஏங்கி நின்றும், ஏற்கா மனிதர்,
இறுதித் தீர்ப்பைத் தாங்காரே.
வாங்கி விற்கா மீட்பையருள்வார்;
வல்லமை இறையும் தூங்காரே.
தாங்கி ஏற்று நம் பழி சுமந்தார்;
தனையன் அன்பில் நீங்காரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
நாலடி நற்செய்தி …6.
அன்பு!
தன்னலம் இல்லா நிலைதான் அன்பு;
தருகிற இறையிடம் கற்பாயா?
உன்னினம் கடந்து உதவும் பண்பு,
உண்மை அறமென நிற்பாயா?
-செல்லையா.
மகனைப் பார்த்து தந்தையை அறிதல்!
நற்செய்தி: யோவான் 8:19.
19. அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.
நல்வழி:
பிள்ளையின் வடிவில் பெற்றோர் காணும்,
பேதமை இல்லாக் கருத்தவராய்,
கள்ளமும் தவறும் செய்வார் கண்டு,
காணாத் தந்தையை, பழிக்கிறோம்.
உள்ளமும் நாவும் உரைத்திட நாணும்,
ஓவாச் செயலே செய்பவராய்,
வெள்ளை இயேசு மகனைக் கொண்டு,
விண் பாராது, முழிக்கிறோம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
நாலடி நற்செய்தி…5
இறைவழி!
திருவடி அடையும் பெருவழி கேட்டேன்.
தெரியா வழிகள் சொன்னார்கள்.
ஒரு வழி கண்டு, உட்புகுந்திட்டேன்.
இறைவழி அன்பு என்பார்கள்!
-செல்லையா.