தீதின் தன்மை எப்படி கெடுக்கும்?
தெய்வம் விட்டுப் பிரிக்கும்.
தூதின் வலிமை போர் தொடுக்கும்;
தீய நெஞ்சையும் பிரிக்கும்.
கோதின் கூட்டு என்று விளிக்கும்,
சூதின் வாழ்வு தொடர்ந்து அழிக்கும்;
சுற்று முற்றும் பிரிக்கும்!
(தொடக்க நூல் 3)

The Truth Will Make You Free
ஒவ்வொரு படைப்பும் கண்டு,
இறையே மகிழ்வு கொண்டு,
அவ்வகை அனைத்தும் நன்று,
என்று சொன்னார் அன்று.
இவ்வித படைப்பில் மிக நன்று
எவ்விதத்திலும் மனிதனென்று,
இறை வாக்குரைப்பதுண்டு.
இப்படிச் சொல்கிற போது
எப்படி என்பாருமுண்டு.
தப்புகள் நீங்கும் என்று,
தருகிறேன் ஏது இன்று.
ஒப்பிலாப் பிறவி மனிதர்;
உண்மையில் இறை சாயல்.
அப்படியாகத்தான் படைத்தார்;
அனைவரையுமே அன்று!
(தொடக்க நூல் 1:4-27)

இறைவன் எங்கே?
(எழுதி வழங்குபவர்:
கெர்சோம் செல்லையா)
அங்குமில்லை, இங்குமில்லை,
ஆண்டவர் எனும் இறைவன்;
எங்குமில்லை, எங்குமில்லை,
என்கிறான் அறியா மனிதன்.
உங்களுள்ளே உங்களுள்ளே
ஒளிந்து கடந்திருப்பேன்.
இங்கு எனை ஏற்பவர் யார்?
என்கிறான் நல்லிறைவன்!
இன்று இறை காண்பதற்கு
என்னவெல்லாம் உண்டு?
என்று இங்கு கேட்பவர்க்கு,
நல்ல விடை உண்டு.
நின்று அசைந்தாடுகின்ற
நிலையில்லா இயற்கை
அன்று முதல் சொல்கிறது,
அதுவே படைப்பென்று!
படைப்பு ஒன்று உண்டு எனில்,
படைத்தவர் அவர் எங்கே?
கிடைத்திடும் வரலாறுகளில்
கேட்கிறார் பலர் இங்கே.
துடைத்திடும் கண் காட்சிகளில்,
தெரியாது இருப்பதினால்,
விடைக்கெல்லாம் அடித்தளமாம்
விவிலியம் பார், அன்பே!
தொடரும்……
போதாது! போதாது!
இறை மொழி: யோவான் 21:25.
25. இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்
இறைமகன் செய்த அருஞ்செயல் கண்டு,
எழுதிய நூல்கள் போதாது.
குறைவற அவற்றின் விளக்கம் கொண்டு
கொடுத்த தாள்கள் போதாது.
மறைநூல் கற்கும் மகிழ்வில் நின்று,
மாட்சி சொல்வரும் போதாது.
நிறைவின் வாழ்வு இறைதானென்று,
நேர்வழி செல்வரும் போதாது!
ஆமென்.
எழுதி வழங்கியவர்: கெர்சோம் செல்லையா. சென்னை-99.
