புதிய அரசுக்கு வாழ்த்துகள்!
எப்படி இருந்தார் என்றுநாம் பாரோம்;
இவர் பின்னாலே இருப்பவர் பாரோம்.
இப்பெரு நாட்டை ஆண்டிடும் பொறுப்பு,
இவருக் கீந்த இறை பார்ப்போம்.
நற்பணி செய்து நன்மை தாரோம்;
நாட்டை உயர்த்த நேர்மை தாரோம்;
அப்படி மட்டும் ஆள்வோம் என்றால்,
ஆசி, அருள், என்றுரைப்போம்!
-கெர்சோம் செல்லையா.