தன்னினத்தவரை காப்பதாய் நினைத்து, 

தவறிச் செல்வார் நடுவினிலே,

இன்னொரு மனிதர் தொங்குதல் கண்டு,

இரண்டு கள்வரும் நிந்தித்தார்.

அந்நிலை வேளையில் இயேசுவின் வாக்கு, 

அவரில் ஒருவரை உணர்த்திடவே, 

மன்னனாய் ஏற்கும் பற்றினைக் கொண்டு, 

மகிழ விண்ணைச் சந்தித்தார்!


(மத்தேயு 27:44 & லூக்கா 23:39-43)