அப்படி அன்று இடம் பெயர்ந்து அகிலம் முழுதும் பரவினார். செப்பும் மொழி வேறுபாட்டால், சிலர் நாட்டையும் நிறுவினார். ஒப்பிட இயலாச் செயல்கள் புரிந்து, ஒரு சில அரசரும் பெருகினார். தப்பாய் இவரைப் பலரும் புகழ, தாமே இறை எனத் திருகினார்! (தொடக்கநூல் 11)