பொங்கி உம்மை வாழ்த்துவரே!
நற்செய்தி மாலை: மாற்கு 11:12-14.
“மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று. இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல. அவர் அதைப் பார்த்து, ‘ இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது ‘ என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
பசியென்று வருபவரை,
பரிவுடன் பார்த்திடுவீர்.
புசியென்று உணவளித்து,
புன்னகையும் சேர்த்திடுவீர்.
கசியென்று இறையருளை,
கண் கலங்கிக் கேட்பவர்கள்,
பொசியும் அவரன்பால்,
பொங்கியுமை வாழ்த்துவரே!
ஆமென்.
